திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முத்தினம்பட்டி அருகே இருக்கும் பிரபல நர்ஸிங் மற்றும் கேட்ரிங் கல்லூரியில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இதில் சுமார் 300 மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இவர்களைக் கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன், கல்லூரிக்கு வரும்போதெல்லாம் சில மாணவிகளை அழைத்து அவர்களுக்குத் தொல்லைக் கொடுத்தார் என்றும் அதேபோல், இவரின் பாலிடெக்னிக் கல்லூரிக்கு மாணவிகளை தனது வண்டியில் அழைத்துச் சென்று பாடல்களுக்கு அவர்களை ஆடச் சொல்லி, பாலியல் தொந்தரவு தந்து வந்ததாகக் கூறப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் முதலாம் ஆண்டு மாணவி, தாளாளரின் தொல்லை காரணமாக கல்லூரியில் தொடர்ந்து படிக்க விருப்பமில்லாமல் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாற்றுச் சான்றிதழ் வாங்கிக் கொண்டு சென்றுள்ளார். இந்தத் தகவல் சக மாணவிகளுக்குத் தெரியவரவே, ஒட்டுமொத்த மாணவிகளும் இன்று (19.11.2021) கல்லூரியிலிருந்து வெளிநடப்பு செய்து, சாலை மறியிலில் ஈடுபட முயன்றனர். 


அதற்குள் இந்தத்தகவல் காவல் துறையினருக்குத் தெரியவர, அங்கு விரைந்த காவலர்கள் கல்லூரியிலிருந்து மாணவிகள் சாலைக்கு வரும் முன் அவர்களைத் தடுத்து, கல்லூரி தாளாளர் மீது நடவடிக்கை எடுப்பதாகவும், அதற்கு துணையாக இருந்த விடுதி பெண் காப்பாளர் மீதும் நடவடிக்கை எடுப்பதாகக் கூறி சமாதானம் செய்ய முயன்றனர்.


ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்த மாணவிகள், "உடனடியாக தாளாளர் ஜோதிமுருகனை கைது செய்யவேண்டும். இல்லையென்றால் போராட்டத்தைக் கைவிட மாட்டோம்' என்று தெரிவித்தனர். ஆனால், தொடர்ந்து மாணவிகளை போலீசார் சமாதானம் செய்ய முயன்றனர்.



ALSO READ |  சென்னை: பாலியல் வன்கொடுமை வழக்கில் அரசு மருத்துவர்கள் இருவர் கைது


இதில் ஆத்திரமடைந்த மாணவிகள் திண்டுக்கல் - பழனி சாலையில் மறியல் போராட்டத்தை துவங்கினர். இந்த விவகாரம் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசனுக்கு தெரியவர, உடனடியாக அப்பகுதிக்கு அவர் விரைந்தார். அங்கு வந்த அவர் மாணவிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். 


ஆனால் மாணவிகள் தாளாளர் ஜோதிமுருகனையும் உதவியாக இருந்த பெண் விடுதி காப்பாளரையும் உடனடியாக கைது செய்து எங்களுக்கு காண்பிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்து தொடர் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டனர். இதனால் அந்தஅ பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது மற்றும் அங்கு போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. 



ALSO READ |  மேலாடையை நீக்காமல் தொடுவதும் பாலியல் வன்முறை தான்: உச்ச உச்ச நீதிமன்றம்


இந்நிலையில் விடுதி காப்பாளர் அர்ச்சனாவை போலீசார்  கைது செய்து காவல்நிலையத்தில் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், தலைமறைவான தாளாளர் ஜோதிமுருகனை போலீசார் தேடி வருகின்றனர். 


திண்டுக்கல் ரெட்டியார்சத்திரம் காவல் நிலையத்திற்கு பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் பெற்றோர்கள் அழைத்துவரப்பட்டு அவர்களிடமும் விசாரணை நடைபெற்று வருவதை போலீசார் தெரிவித்ததை மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். 


கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி அமமுக வேட்பாளராக போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ |  பெண் எஸ்.பி.க்குப் பாலியல் தொல்லை வழக்கு; பெண் எஸ்.பி நேரில் ஆஜராகி சாட்சியம்



உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR