திண்டுக்கல்லில் நேற்று பெண் ஒருவர் தலை வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து, ஜவுளி வியாபாரம் செய்துவரும் வாலிபர் ஒருவரும் அதே போன்று தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திண்டுக்கல் அருகில் உள்ள அனுமந்தராயன் கோட்டையை சேர்ந்த 38 வயது ஸ்டீபன் என்பவரை அனுமந்தராயன் கோட்டை பேருந்து நிலையம் அருகே, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், ஸ்டீபனை படுகொலை செய்தனர். அதோடு அவரது தலையை வெட்டி அங்கேயே போட்டுவிட்டு உடலை அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வட்டப்பாறை என்னும் இடத்தில் வீசி விட்டுச் தப்பிச் சென்றனர்.


ALSO READ | திண்டுக்கல்லில் பயங்கரம்! பெண் தலையை வீட்டு வாசலில் வீசிய கொலையாளிகள்


படுகொலை செய்யப்பட்ட ஸ்டீபனின் மனைவியில் பெயர் மார்க்ரெட். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஜவுளி வியாரம் செய்து வரும் ஸ்டீபன், பெண்களை வைத்து விபச்சாரம் செய்ததாக வழக்குகள் தொடுக்கப்பட்டு, நிலுவையில் உள்ளது.


இந்த படுகொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஸ்டீபன் கொலைக்கு முன்பகை காரணமா காரணமா அல்லது தொழில் போட்டி என பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


ALSO READ | சாப்பாடு போட மறுத்த தாயை கத்தியால் குத்திக் கொன்ற கொடூர மகன்


திண்டுக்கல் அருகே நேற்றும், இதே போன்று பட்ட பகலில் நடந்த கொலை சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் பெண் ஒருவர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டிருப்பது, அங்கு வாழும் மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் கொலையாளிகள் அவரது தலையை வெட்டி, வீட்டு வாசலில் வீசி விட்டு சென்றுள்ளனர். 


ALSO READ | Domestic violence:பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற தந்தையை கொன்ற மகள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR