திண்டுக்கல் மாவட்டம் பழனியில் திருநங்கைகளுக்கான மறுவாழ்வு விழிப்புணர்வு உள்ளரங்க கூட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட காவல்துறை எஸ்பி சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்துகொண்டனர்.  கூட்டத்தில் பேசிய எஸ்பி, "பழனி கோவிலுக்கு வரும் பக்தர்களிடம்  திருநங்கைகள் கட்டாய பணம் வசூலிப்பது குற்றமாகும். பக்தர்கள் விரும்பி கொடுக்கும் பணத்தை பெறாமல் அவர்களை மிரட்டி அதிகபணம் பிடுங்குவதாக தொடர் புகார்கள் வருவது கவலையை ஏற்படுத்துகிறது.எனவே பழனிக்கு வரும் பக்தர்களை திருநங்கைகள் சூழ்ந்துகொண்டு மிரட்டும்வகையில் பணம் பறித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


பக்தர்கள் கொடுக்கும் புகாரின் பேரில் குற்றத்தில் ஈடுபடும் திருநங்கைகள் மீது குண்டர் சட்டம் பாயும் என்றும் எச்சரித்தார்.  மேலும் திருநங்கைகள் தங்களுக்கு தெரிந்த தொழில்கள் மற்றும் வேலைகள் குறித்து தெரிவித்தால் அரசிடம் பரிந்துரை செய்து தொழிற்கடன் மற்றும் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுப்பதாகவும், எனவே பக்தர்களிடம் பணம் வசூல் செய்யும் செயலை திருநங்கைகள் நிறுத்திக்கொள்ள வேண்டும்.


பழனியில் வசிக்கும் திருநங்கைகள்  தவிர சீசனுக்காக பழனி வந்து தங்கி பக்தர்களிடம் பணம் வசூல் செய்யும் திருநங்கைகள் தங்களது சொந்த ஊருக்கு திரும்பி  செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் பழனி டிஎஸ்பி சத்யராஜ், நகர காவல் ஆய்வாளர் உதயகுமார் அடிவாரம் காவல் சார்பு ஆய்வாளர் முத்துக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.


ALSO READ | நீட் தேர்வு நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அறிக்கை


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR