“ஆடிட்டர் ஆக ஆசை” 600க்கு 600 மார்க் பெற்று சாதனை படைத்த திண்டுக்கல் மாணவியின் கனவு!
பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து, திண்டுக்கல்லை சேர்ந்த மாணவி ஒருவர் 600க்கு 600 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.
தமிழகத்தில் +2 தேர்வெழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில், மாணவிகள் 94.03 சதவிகிதமும் மாணவர்கள் 91.45 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில், பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் அனைத்து பாடங்களிலும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாணவி சாதனை புரிந்துள்ளார்.
கூலித்தொழிலாளியின் மகள்:
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அண்ணாமலையார் பள்ளியின் மாணவி, நந்தினி. பானுபிரியா-சரவணக்குமார் தம்பதியின் மகளான இவர், +2 தேர்வில் அனைத்து பாடங்களிலும் சென்டம் எடுத்து 600க்கு 600 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார. இவ்வாறு ஒருவர் அனைத்து பாடங்களிலும் முழு மதிப்பெண்கள் பெற்று 600க்கு 600 மதிப்பெண்கள் பெருவது, இதுவே முதல்முறை. இப்படியொரு சாதனையை படைத்திருக்கும் நந்தினி, ஒரு கூலித்தொழிளாலியின் மகள் என்பதை அவரே தொலைக்காட்சிகளுக்கு அளித்துள்ள பேட்டிகளில் தெரிவித்துள்ளார்.
“கல்விதான் எல்லாமே..”
தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், முழு மதிப்பெண்கள் பெற்று சாதனை புரிந்த நந்தினியை பலரும் பேட்டி கண்டனர். அந்த பேட்டியின் போது அவர் கூறியதாவது, “எனக்கு கல்விதான் சொத்து..எல்லாமே என்பதை எனது பெற்றோர் சொல்லி சொல்லி வளர்த்தனர். ஒரு கூலித்தொழிலாளியான மகளான என்னால் என்ன செய்துவிட முடியும் என நான் ஒருபோதும் நினைத்ததில்லை. என் பெற்றோரின் பேச்சையே நானும் கடைபிடித்தேன். அதனாலேயே என்னால் இவ்வளவு மதிப்பெண்கள் எடுக்க முடிந்தது. நம்பிக்கையுடன் முயற்சித்தால் எல்லாமே சாத்தியம்” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார், சாதனை புரிந்த நந்தினி.
ஆடிட்டர் ஆக ஆசை:
+2 தேர்வில் சாதனை புரிந்துள்ள நந்தினி தனக்கு ஆடிட்டர் ஆக வேண்டும் என்ற ஆசை உள்ளதாக கூறினார். இதையடுத்து, மாணவிக்கு பலரும் அவரது கணவு நிறைவேற வேண்டும் என வாழ்த்து கூறி வருகின்றனர்.
தந்தையை இழந்த மாணவி அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி!
ஏப்ரல் 4ஆம் தேதியன்று நடந்த +2 தேர்வு தேர்வின் போது, தந்தை இறந்த நிலையில் ஒரு மாணவி தேர்வினை எழுதினார். கடலூர், திருப்பாதிரிப்புலியூரில் உள்ள ஒரு பள்ளியில் பயின்ற அந்த மாணவியின் தந்தை உடல் நிலை சரியில்லாத காரணத்தால் உயிரிழந்தார். இதை அறிந்தும், அந்த மாணவி பள்ளிக்கு சென்று அன்றைய தேர்வினை எழுதினார். இன்று தேர்வு முடிவுகள் வெளியாகியது. அதில், கிரிஜா 479 மதிப்பெண்கள் பெற்று தேர்வாகியுள்ளது அனைவரிடத்திலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ