கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர், சூளகிரி அருகே உள்ளது  பிள்ளைக்கொத்தூர் கிராமம். இங்குள்ள மக்கள் பலர் விவசாயத்தையே வாழ்வாதாரமாக நம்பி வாழ்ந்து வருகின்றனர். அது மட்டுமின்றி பலர் வீடுகளில் மாட்டு பண்ணைகள் வைத்து வருமானம் ஈட்டி வருகின்றனர். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த சீனப்பா மற்றும் அவரது சகோதரரான வெங்கடேசப்பா ஆகியோர் அங்கு மாட்டு பண்ணை வைத்து நடத்தி வந்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இவர்களிடம் நாட்டு மாடு, கன்று குட்டிகள், கறவை மாடு உள்ளிட்ட பல மாடுகள் இருந்துள்ளது. இந்த மாடுகளை அவர்கள் தங்கள் விவசாய நிலத்தின் அருகே உள்ள தொழுவத்தில் கட்டி வைத்திருந்துள்ளனர். நீண்ட நாட்களாக இதை நோட்டம் விட்ட மரம் நபர்கள் சிலர் அந்த மாடுகளை எப்படியாவது ஆட்டைபோட வேண்டமென திட்டமிட்டுள்ளனர்.


இதற்கு தகுந்தார்போல் திட்டமிட்ட மர்ம நபர்கள், டிப்டாப்பாக ஜீன்ஸ் பேன்ட் மற்றும் சட்டை அணிந்து இரவு நேரத்தில் தொழுவத்தில் புகுந்து வராத மட்டை வலுக்கட்டாயமாக இழுத்துச்சென்றுள்ளனர். ஆனால் பாவம் அந்த டிப்டாப் திருடர்களுக்கு கிராம மக்களால் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி குறித்து எவ்வித தகவலும் தெரிந்திருக்காதுபோலும்.


இவர்கள் வந்து மாடுகளை திருடிச்செல்லும் காட்சி அந்த சிசிடிவியில் மிக தெளிவாகவே பதிவாகியிருந்த நிலையில் இது குறித்து சீனப்பா மற்றும் அவரது சகோதரரான வெங்கடேசப்பா ஆகியோர் போலீஸில் புகார் அளித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் கிடைக்கப்பெற்ற சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி டிப்டாப் திருடர்களுக்கு வலைவீசியுள்ளனர். 


மேலும் படிக்க | வாகனங்களில் ’சூட்கேஸ்’களுடன் பயணிப்பவரா நீங்கள்? - ஸ்கெட்ச் போடும் இவர்களிடம் உஷார்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR