அஜய் தேவ்கனுக்கும் கிச்சா சுதீப்புக்கும் சில நாள்களுக்கு முன்பு நடந்த  ‘இந்தி தேசிய மொழியா இல்லையா’ என்ற வாக்குவாதத்திற்கு பிறகு பலரும் மொழி விஷயத்தில் தங்களது கருத்தை தெரிவித்துவருகின்றனர். நடிகையும், இயக்குநர் மணிரத்னத்தின் மனைவியுமான சுஹாசினி இன்று,”இந்தி பேசும் மக்கள் நல்லவர்கள். அவர்களுடன் பழக அந்த மொழியை கற்றுக்கொள்ள வேண்டும்” என கூறியிருந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில்,இயக்குநரும், நடிகருமான அமீர் மதுரையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “தமிழ்நாட்டு மக்கள் ஒற்றுமையாக சகோதரத்துவத்துடன் இணைந்து செயல்பட வேண்டும். 



தமிழ் பேசுபவர்கள் கெட்டவர்களா. இந்தி தெரியாத மக்கள் நாட்டிலிருந்து வெளியேற வேண்டும் என சொல்கிறார்கள். நாட்டை விட்டு வெளியேற தயார், எது நாடு, யார் யார் இன மக்கள் என சொல்ல வேண்டும். இந்தியை திணிப்பவர்கள் என் தேசத்தை விட்டு வெளியேற வேண்டும். தமிழ்நாட்டில் மிக ஆழமாக ஆரியம் காலுன்றி வருகிறது. 


மேலும் படிக்க | அடுத்தடுத்து நடக்கும் மறுவாழ்வு மைய மரணங்கள்... இயற்கை மரணமா? கொலையா?


இந்தி பேச வேண்டும் என சொல்வதுதான் பாசிசம். கலைக்கு மொழி கிடையாது. தமிழ் கலைஞர்கள் வெளி மாநிலங்களில் தமிழ் குறித்து பேசுவதில்லை. சினிமா வாய்ப்பு பறிபோகும் நிலை வரும் என அச்சம் அவர்களுக்கு இருக்கிறது. தமிழ் கலைஞர்களில் உச்சத்தில் உள்ள சிலர், சுய லாபத்துக்காக சுய நலத்துடன் நடந்து கொள்கிறார்கள். 


தமிழ்நாட்டு உச்ச நடிகர்கள், தங்களது வியாபாரம் பாதிக்கப்படும் என்பதற்காக, மொழி சார்ந்த எந்த பிரச்சனைகள் குறித்தும் பேசுவதில்லை. இது அவர்களுடைய ரசிகர்களுக்கு செய்யும் துரோகம். 



மொழி, இனம் தொடர்பாக வெறி இருக்க கூடாது. பற்று இருக்க வேண்டும். தமிழ் மக்களை, தமிழ் இசையோடு இணைத்து வைத்தவர் இளையராஜா. ஒட்டுமொத்த இந்திய தேசமும் ஏ.ஆர்.ரகுமானை கொண்டாடியது.


மேலும் படிக்க | மூத்த கலைஞர்தான்... அதற்காக இப்படியா கங்கை அமரன்?


ஏ.ஆர்.ரகுமான் புகழ்பெற்றதால் அவர் மும்பையில் விரட்டப்பட்டார்.சினிமா கலைஞர்களை வைத்து, இந்தியை வளர்க்க பாஜக நடவடிக்கை எடுத்துவருகிறது” என்றார்.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR