போதைப்பொருள் வழக்கில் வந்த சம்மன்! இயக்குநர் அமீர் கொடுத்த ரிப்ளை
போதை பொருள் கடத்தல் வழக்கில் இயக்குனர் அமீர்க்கு சம்மன் அனுப்பப்பட்ட விவகாரம் ரம்ஜானுக்கு பிறகு ஆஜராவதாக அமீர் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2000 கோடி ரூபாய் போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் முக்கிய குற்றவாளி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் உட்பட இதுவரை ஐந்து நபர்களை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்து விசாரணைகள் மேற்கொண்டனர். இந்த விசாரணையில் தேங்காய் பவுடர் ராகி உள்ளிட்ட உணவு பொட்டலங்கள் பெயரில் பல்வேறு நாடுகளுக்கு போதை பொருளை கடத்தியது விசாரணையில் அம்பலமானது. இதையடுத்து இந்த போதைப் பொருள் கடத்தல் விவகாரத்திற்கு யாரெல்லாம் உடந்தையாக இருந்தார்கள் இவர்களுக்கு யாரெல்லாம் உதவினார்கள் என்ற கோணத்தில் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க | TN Lok Sabha Election 2024: வேலூரில் திமுக வேட்பாளரிடம் சரமாரி கேள்வி
இந்த நிலையில் ஜாபர் சாதிக் போதை பொருள் கடத்தல் மூலம் ஈட்டிய வருவாய் படங்கள் தயாரிப்பது பல்வேறு தொழில்களில் முதலீடு செய்வது போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ளதால் அவர் மேற்கொள்ளும் தொழிலில் யாரெல்லாம் இறுக்கமாக உள்ளார்கள் என்பதை கண்டறிந்து அவர்களையும் விசாரணை நடத்த மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் திட்டமிட்டனர். இந்த நிலையில் ஜாபர் சாதிக் உடன் இணைந்து ஓட்டல் நடத்தி வந்த தமிழ் திரைப்பட இயக்குனர் அமீருக்கு நேற்று மத்திய போதைபொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சம்மன் ஒன்று அனுப்பியிருந்தனர்.அதில் ஏப்ரல் இரண்டாம் தேதி செவ்வாய்க்கிழமை டெல்லி மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டு இருந்தனர்.
மேலும் அப்துல் பாசித் புகாரி, சையத் இப்ராஹிம் ஆகிய இருவருக்கும் சமன் அனுப்பப்பட்டு ஏப்ரல் இரண்டாம் தேதி விசாரணை ஆஜராக வேண்டுமென குறிப்பிட்டு இருந்தனர். இந்த நிலையில் அப்துல் பாசித் புகாரி, மற்றும் இயக்குனர் அமீர் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு இமெயில் மூலமாக கடிதம் ஒன்று அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில் அப்துல் பாசித் புகாரி வெளிநாட்டில் இருப்பதாகவும் இயக்குனர் அமீர் ரம்ஜான் பண்டிகை முடிந்த பிறகு விசாரணைக்கு ஆஜராகுவதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தக் கோரிக்கையை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஏற்காத பட்சத்தில் நாளை இயக்குனர் அமீர் டெல்லியில் உள்ள மத்திய போதைபொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அலுவலகத்தில் ஆஜராவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | சின்னம் பார்த்து வாக்களிக்காதீர்கள் - பாமக வேட்பாளர் தங்கர் பச்சான் வேண்டுகோள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ