சென்னை: சீனாவில் இருந்து பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் கிட்டத்தட்ட உலகம் முழுவதும் பரவி உள்ளது. உலக மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. ஏற்கனவே பிரதமர் மோடி ஏப்ரல் 15 ஆம் தேதி வரை மொத்தம் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார். நாட்டு மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும்,  அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வெளியே வார வேண்டும். சமூக இடைவெளியை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுக்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனா தொற்றுநோயை நிர்வகிக்க தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள், N95 முகமூடிகள் மற்றும் வென்டிலேட்டர்கள் வாங்குவதற்கு பிரதமர் நரேந்திர மோடியை ₹ 3,000 கோடி ஒதுக்குமாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார். பிரதமருடனான தனது வீடியோ கான்ப்ரஸ் உரையாடலின் போது, ​​இதனை வலியுறுத்தியுள்ளார்.


இந்நிலையில், கொரோனாவுக்கு எதிராக தமிழக அரசு எடுத்து வரும் முயற்சிகள் பாராட்டிய இயக்குநர் பாரதிராஜா, தமிழக காவல்துறையினர், கார்ப்பரேஷன் ஊழியர்கள் மற்றும் துணை மருத்துவர்களுக்கு முகமூடிகள், கையுறைகள் மற்றும் கை சுத்திகரிப்பான்களை வழங்கினார். 


இவரின் நன்கொடை பங்களிப்பை நெட்டிசன்களால் பாராட்டப்படுகிறது. நெருக்கடி காலங்களில், மக்கள் எப்போதுமே ஒரு உதவியைக் கொடுக்க தயாராக இருக்கிறார்கள். மேலும் இது சுனாமி, பூகம்பங்கள் மற்றும் வெள்ள சூழ்நிலைகள் போன்ற இயற்கை பேரழிவுகளின் போது பல முறை காணப்பட்டது.


தற்போது, கொரோனா வைரஸ் காரணமாக நாடு கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இந்த நேரத்தில், மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களைத் தவிர, திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் தொழிலதிபர்களும் நிதி பங்களிப்பில் தங்கள் பங்கைச் செய்து வருகின்றனர்.