Bail For Director Mohan G: இயக்குநர் மோகன் ஜியை போலீசார் இன்று கைது செய்த நிலையில், திருச்சி நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பழனி முருகன் கோவிலில் வழங்கப்படும் பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு பரப்பியதாக இன்று காலை திரைப்பட இயக்குநர் மோகன் ஜி சென்னை ராயபுரத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து
திருச்சி சமயபுரம் காவல் நிலைய போலீசாரால் கைது செய்யப்பட்டார்.


கைது செய்யப்பட்ட இயக்குனர் மோகன் ஜி மாலை திருச்சி மூன்றாவது குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி பாலாஜி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, இயக்குனர் மோகன் ஜிக்கு நாளை 3 மணிக்கு ஆஜராக நோட்டீஸ் கொடுத்துவிட்டு, இன்று காலை கைது செய்தது ஏன் என சமயபுரம் காவல் நிலைய ஆய்வாளரிடம் கேள்வி எழுப்பினார். 


இதனைத் தொடர்ந்து இயக்குனர் மோகன் ஜியை சொந்த ஜாமினில் விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டார்.  வழக்குப் பதிவு செய்தது சரிதான் என்றும் ஆனால் அவரை கைது செய்ய முறை ஏற்கத்தக்கதல்ல நீதிபதி தெரிவித்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | லட்டு விவகாரம்: எச்சரித்த பவன் கல்யாண்... உடனே மன்னிப்பு கேட்ட நடிகர் கார்த்தி - என்ன நடந்தது?


போலீசார் அளித்த விளக்கம்


திரைப்பட இயக்குநர் மோகன் ஜி கைது குறித்து திருச்சி மாவட்ட காவல்துறை தரப்பில் இன்று விளக்கம் அளிக்கப்பட்டது. இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில், இந்து மதத்தினரையும், இந்து மக்களையும் புண்படுத்தும் விதமாக மோகன் ஜி கைது செய்ததாக குறிப்பிட்டுள்ளது. 


மேலும் அதில், திருச்சி மாவட்டம் சமயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உள்ள இந்து அறநிலையத்துறையில் மேலாளராக பணிபுரிந்து வரும் கவியரசு அளித்த புகாரில், கடந்த செப். 21ஆம் தேதி மதியம் 1 அளவில் தான் பணியில் இருந்த போது, பக்தர்கள் சிலர் இந்து மதத்தையும், இந்து கோவில்களை பற்றியும் தமிழ் திரைப்பட இயக்குநர் மோகன் ஜி பேசியதாக பேசிக்கொண்டிருந்தனர். 


பஞ்சாமிர்தத்தில் மாத்திரை கலப்பு?


இதனை தொடர்ந்து எனது செல்போனில் பார்த்தபோது, IBC Youtube வளைதளத்தில் 'உலகம் முழுவதும் வாழும் இந்துக்கள் என்ன இளிச்சவாயர்களா என்ற தலைப்பில், 'அருள்மிகு பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில், பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் பஞ்சாமிர்தத்தில் ஆண்மை குறைவு ஏற்படுத்தும் மாத்திரைகளை பயன்படுத்துவதாக, உண்மைக்கு புறம்பாக விமர்சனம் செய்து, கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.


'மதநல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில்...'


தற்சமயம் திருப்பதி திருமலை தேவஸ்தானத்தில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில் அசைவ பொருட்களான மீன் எண்ணெய்யும், மாட்டு கொழுப்பும் கலந்து உள்ளதாக கூறப்படும் விவகாரம் அடங்குவதற்குள், தமிழக மக்களிடையே மதநல்லிணக்கத்தை கெடுக்கும் வகையிலும், கலவரத்தை தூண்டும் வகையிலும், பொய்யான செய்தி பரப்பியதாக, தமிழ் திரைப்பட இயக்குநர் மோகன் ஜி  மீது நடவடிக்கை எடுக்கும்படி புகாரில் குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் சமயபுரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, மேற்படி நபர் கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது நீதிமன்றம் மோகன் ஜிக்கு ஜாமின் வழங்கி உள்ளது. 


மேலும் படிக்க | தேனியில் நடந்த கொடூரம்.. மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ