அக்னிபாத் திட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பினாலும் இத்திட்டத்தை திருமப்பெறுவதில்லை என்பதில் மத்திய அரசு உறுதியாக இருக்கிறது. அதேபோல் எதிர்ப்புகள் எழுந்தாலும் இத்திட்டத்துக்கு பாஜகவைச் சேர்ந்தவர்கள் ஆதரவு தெரிவித்துவருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில்  ராமநாதபுரம் மாவட்டத்தில் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த யோகா பயிற்சியில் இயக்குநர் பேரரசு கலந்துகொண்டார். அதன் பிறகு பேசிய அவர், “அக்னி பாதை திட்டம் இளைஞர்களுக்கு நல்லதொரு வாய்ப்பு. இதனால் அவர்களின் வாழ்க்கைத் தரம் உயரும். இதன்மூலம் ஒருவருக்கு ஒழுக்கம், கட்டுப்பாடு, தேசப்பற்று கிடைக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.



ரயிலை கொளுத்துகிறார்கள் என்றால், இந்த தைரியம் இளைஞர்களுக்கு எப்படி வந்தது? இந்த இளைஞர்கள் ராணுவத்திற்கு சென்று எப்படி நாட்டை காப்பாற்றுவார்கள்? ஆகவே தேச விரோதிகளை இத்திட்டம் அடையாளம் காட்டிவிட்டது. பொதுச்சொத்தை நாசம் செய்பவர்கள் தேசத்துரோகிதான். வன்முறை தூண்டிவிடப்படுகிறது. இந்தியாவுக்கு நல்லது நடந்துவிடக்கூடாது என நினைக்கிறார்கள்.


பல்வேறு நல்ல திட்டங்கள் மூலம் இந்தியாவை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. தேசத்தை வலிமை மிக்க நாடாக மாற்றும் நோக்கில் அக்னி பாதை திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை சமூக விரோதிகள் எதிர்ப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்தியாவை வளர்ச்சி அடைய விடாமல் தடுப்பவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். இந்தத் திட்டத்தில் எவ்வித மத பேதமும் இல்லாமல் அனைவரும் பங்கேற்கலாம் என்று தெரிவித்திருப்பது மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.



இந்தியாவுக்கு எதிராக கருத்து சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். பாரத மாதாவின் புகைப்படத்தை பதிவேற்றினாலும் விமர்சனம் செய்கிறார்கள். உண்மையான உணர்வுள்ள இந்தியன் இந்த நாட்டை காக்க இந்த திட்டத்தில் சேர்ந்து வென்று காட்ட வேண்டும். இதை எதிர்ப்பவர்கள் இந்தியர்களாக இருக்க மாட்டார்கள்” என்றார்.


மேலும் படிக்க | திமுக சந்தோஷப்பட வேண்டாம்.. உதயநிதி பட்டாபிஷேகத்தில் இதே தான் நடக்கும் - சி.வி.சண்முகம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR