மக்களுக்கு இப்போதாவது விடிவுகாலத்தை தாருங்கள் - தங்கர் பச்சான் வேதனை!
மதுபானத்தால் குடும்பங்களில் ஏற்படும் இழப்பை நீக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயக்குனர் தங்கர் பச்சான் கூறியுள்ளார்.
தமிழகத்தில் நடக்கும் சில சமூக அவலங்கள் குறித்து தங்கர் பச்சான் (Thangar Bachan) குரல் கொடுத்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜல்லிக்கட்டில் முதல் பரிசை வென்றவருக்கு காருக்கு பதிலாக அவரது வாழ்வை மேம்படுத்த மாடுகளை பரிசாக கொடுக்கலாம் என்று கோரிக்கை வைத்தார். தற்போது நாட்டில் மதுவால் பல குடும்பங்கள் நாள்தோறும் சந்திக்கும் இன்னல்களை நீக்க அரசு நல்ல முடிவினை எடுக்க வேண்டும் எனக்கோரி இயக்குனர் தங்கர் பச்சான் சமூக வலைத்தளத்தில் கடுமையாக அரசை சாடி பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
ALSO READ | ஆளுநர் Vs ஸ்டாலின்: மோதலுக்கு பிறகு முதல் சந்திப்பு
பெற்றோர்களே மகனை கொள்கின்றனர், பெற்ற மகளையே அனுபவிக்க தொந்தரவு செய்யும் கணவனை மனைவி கொள்கிறாள், கணவனை இழந்து தாலி அறுக்கப்பட்டு பெண்கள் குடும்ப சுமையை தாங்க முடியாமல் தெருவுக்கு தெரு, ஊருக்கு ஊர் கண்ணீரோடு நிற்கின்றார்கள். தந்தையை இழந்து எதிர்காலம் கேள்விக்குறி ஆக்கப்பட்டு பிள்ளைகள் பறிதவிக்கின்றார்கள். மகனை இழந்து, வருமானத்தை இழந்து, ஆதரவின்றி முதுமை அடைந்த பெற்றோர்கள் ஆதரவின்றி அலைகின்றார்கள்.
வெறும் வருவாய்க்காக தன் மக்களையே குடிவெறிக்கு ஆட்படுத்தி ஆளப்படும் ஆட்சி குறித்து இப்பொழுதாகிலும் தயவு கூர்ந்து நம் ஆட்சியாளர்களும், அரசியல்வாதிகளும் சிந்திக்க வேண்டிய நேரம் இது, குறிப்பிட்டுள்ள கொடுமைகளும் சீர்கேடுகளும் அவர்கள் குடும்பத்தில் நடந்தால் அதன் பாதிப்பும் அழிவும் அவமானமும் எவ்வளவு பெரிய பாதிப்பு என்பது புரியவரும். அதுவரை இவைகளெல்லாம் வெறும் செய்தி மட்டும்தான் என நினைக்கின்றார்களா என்று புரியவில்லை.
பெரும்பாலான குற்றங்களுக்கும், நோய்களுக்கும் ஊற்றுக் கண்ணாக இருக்கும் மதுக்கடைகளை மூலைக்கு மூலை திறந்து கொண்டே தமிழக மக்களுக்காகவே உழைக்கிறோம், தமிழ்நாட்டை முதல் மாநிலமாக மாற்றிக் காட்டுவோம் என இன்னொருமுறை தயவுசெய்து கூறாமல், இம்மக்களுக்கு ஒரு விடிவுகாலத்தை ஏற்படுத்தி தாருங்கள் என்று தங்கர்பச்சான் கூறியுள்ளார்.
ALSO READ | மாடு பிடி வீரருக்கு கார் பரிசாக கொடுக்கக்கூடாது - தங்கர் பச்சான் தடாலடி !
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR