ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும் பரிசல்கள் இயக்கவும் தடை!
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும் பரிசல்கள் இயக்கவும் இரண்டாவது நாளாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது!
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும் பரிசல்கள் இயக்கவும் இரண்டாவது நாளாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது!
தென்இந்திய மாநிலங்களில் பொழிந்து வரும் தொடர் மழை காரணமாக கர்நாடகத்தில் இருந்து காவிரியில் நீர் திறந்துவிடப்பட்டது. நேற்று காலை தர்மபூரி மாவட்டம் ஒகேனக்கல் எட்டிய நீரின் வேகம் 25000 கனஅடி-லிருந்து 30000 கனஅடி-ஆக உயர்ந்தது.
இதனால் ஒகேனக்கல் அருவிகளில் மக்கள் குளிக்கவும், ஆற்றில் பரிசல்கள் இயக்கவும் தடை விதிக்கப்பட்டது.
கர்நாடகத்தில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு தற்போது படிப்படியாகக் குறைக்கப்பட்டு வருவதால் ஒகேனக்கல்லிலும் இன்று நீர்வரத்து நொடிக்கு 23000 கனஅடி-யாகக் குறைந்துள்ளது.
எனினும் ஒகேனக்கல் வந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி அருவிகளில் குளிப்பதற்கும், பரிசல்களை இயக்குவதற்கும் தொடர்ந்து இரண்டாவது நாளாக மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
இதனால் ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பரிசல் துறை அருகிலேயே தடுத்து நிறுத்தப்பட்டு வருகின்றனர். ஆற்றுப்பகுதியை பார்வையிட்டு செல்ல மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.