புயல் தொடர்பான புகார்கள் மற்றும் உதவிகளுக்கு அவசர உதவி எண்களின் விவரம்
பொது மக்கள் உதவி மற்றும் ஏதாவது புகார் தெரிவிக்க வேண்டும் என்றால், மாவட்ட வாரியாக புயல் அவசர உதவி எண்களை தமிழக அரசு (TN Govt) அறிவித்துள்ளது.
சென்னை: வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிவர் புயலாக வலுப்பெற்றுள்ளது. நிவர் புயல் இன்று மாலை தீவிர புயலாக வலுப்பெறும். மேலும் மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே நாளை மாலை தீவிர புயலாக மாறும் நிவர் புயல் (Nivar Cylone) கரையை கடக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. எனவே மக்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு உதவி மற்றும் ஏதாவது புகார் தெரிவிக்க வேண்டும் என்றால், மாவட்ட வாரியாக புயல் அவசர உதவி எண்களை தமிழக அரசு (TN Govt) அறிவித்துள்ளது.
இதையடுத்து, தமிழகத்தின் புயல் பாதிக்கும் மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இன்று பிற்பகல் 1 மணி முதல் மேலதிக அறிவிப்பு வரும் வரை ஏழு மாவட்டங்களுக்குள் மற்றும் இடையே பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது. புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், வில்லுபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய ஏழு மாவட்டங்கள் சூறாவளி புயல் (Cyclone Nivar) காரணமாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு பகுதியாகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. மேலும் நிவர் புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை தமிழகம் (Tamil Nadu) முழுவதும் நாளை பொதுவிடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
ALSO READ | நிவர் புயல்: 8 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!
மறுபுறம் நிவர் புயல் காரணமாக நாளை (நவம்பர் 24) மற்றும் நாளை மறுநாள் (நவம்பர் 25) ஆம் தேதிகளில் சில ரயில்களை பகுதியாகவும், சில ரயில்களை முழுமையாக ரத்து செய்துள்ளதாக தெற்கு ரயில்வே (Southern Railway) உத்தரவிட்டுள்ளது.
தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தை (National Disaster Response Force) சேர்ந்த 12 குழுக்கள் தமிழகத்தின் வடக்கு மற்றும் மத்திய கடலோர மாவட்டங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. கடலூரில் ஆறு அணிகள், புதுச்சேரியில் இரண்டு, காரைக்கலில் ஒரு அணிகள், சென்னையில் இரண்டு அணிகள் மற்றும் மதுரையில் ஒரு அணிகள் பாதுக்காப்பு பணிகளை மேற்கொள்ள நிறுத்தப்பட்டுள்ளன.
இன்று நிவர் புயல் (Nivar Cylone) தொடர்பாக உதவிகளை மேற்கொள்ள சென்னையில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு மையத்தை முதல்வர் பழனிசாமி (Edappadi Palaniswami) பார்வையிட்டார்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR