தீபாவளிக்காக சென்னையில் இருந்து தான் சொந்த மாவட்டத்திற்கு செல்லும் பொதுமக்கள் இன்று முதல் ரயில்களின் டிக்கெட்டுக்களை முன்பதிவு செய்துக்கொள்ளலாம் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தொழில் காரணமாகவும், வேலை காரணமாகவும் மற்றும் கல்விக்காகவும் பலர் தான் சொந்த ஊரை விட்டு சென்னையில் வந்து தங்கி வாழ்கின்றனர். இவர்கள் தீபாவளி, பொங்கல் என பண்டிகை காலங்கள் வரும் போது தொடர்ந்து விடுமுறை கிடைகிறது. அப்பொழுது தங்கள் சொந்த ஊருக்கு சென்று, தனது குடும்பத்தாருடன் பண்டிகை கொண்டாடுவது வழக்கம். 


இதனால் பண்டிகை காலங்களில் பேருந்து, ரயில் நிலையங்கள் என கூட்டம் அலைமோதும். டிக்கெட் கிடைப்பதும் பெரும் சிரமம். இதனால் பயணிகள் முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்துக் கொள்கின்றனர். 


தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊருக்கு செல்லுபவர்கள் இரெயில்களில் இன்று முதல் முன்பதிவு செய்துக் கொள்ளலாம் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இந்த வருடம் தீபாவளி பண்டிகை நவம்பர் 6-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனால் இன்று (ஜூலை 5) முதல் முன்பதிவு செய்யலாம். 


இரயில்வேயில் 120 நாட்களுக்கு முன்பே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.