தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு பேருந்துகளில் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கான முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாடு முழுவதும் நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளி (Diwali Festival) பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. அதன்படி அன்றைய தினம் வியாழக்கிழமை என்பதால் கூடுதலாக ஒருநாள் (வெள்ளிக்கிழமை) விடுப்பு எடுத்தால் 4 நாட்கள் விடுப்பு கிடைக்கும். இது போன்ற பெரிய பண்டிகைகளில் சொந்த ஊர்களுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.


ALSO READ | 7th Pay Commission: தீபாவளிக்கு முன் மீண்டும் அதிகரிக்கிறதா ஊதியம்?


இதற்காக பலரும் ரயில்களி முன்பதிவு செய்துள்ளனர். தீபாவளி சிறப்பு ரயில் குறித்த அறிவிப்புக்காக சிலர் காத்திருக்கின்றனர். ரயில்களில் டிக்கெட் கிடைக்காதவர்கள் பேருந்துகளில் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். அதன்படி அரசு விரைவு பேருந்துகளில் பயணம் செய்ய 30 நாட்களுக்கு முன்பு டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி வழப்படுகிறது.


இந்நிலையில் தீபாவளிக்கு முந்தைய நாளான நவம்பர் 3ம் தேதி சொந்த ஊர்களுக்கு செல்வதற்கான முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது. டிஎன்எஸ்டிசி என்கிற அரசு செயலி மற்றும் தனியாா் போக்குவரத்து செயலிகள் மற்றும் ஆன்லைன் வழியாக பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.


பொதுவாக தீபாவளி பண்டிகைக்கு தென் மாவட்டங்களுக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் நிலையில் அந்த மாவட்டங்களுக்கு படுக்கை வசதியுடன் கூடிய பேருந்துகள், குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகள் போன்றவை இயக்கப்பட்டு வருகின்றன. 


இன்று முன்பதிவு தொடங்கிய நிலையில், விரைவில் தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கம் தொடர்பாக அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 4 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ: 7th Pay Commission: DA, DR குறித்து அரசின் தலையீட்டை நாடிய ஓய்வூதியர் சங்கம், விவரம் இதோ


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR