மக்களவை தேர்தலில் 4 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது தேமுதிக!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ்நாட்டில் வரும் 18.04.2019 அன்று நடைபெறவிருக்கும் நிலையில், தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், மக்களவை தேர்தலையும், தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலையும் சந்திக்க அதிமுக தயாராகி வருகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரி என அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் மொத்தம் 40 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதில் அதிமுக 20 இடங்களில் களம் காண்கிறது. 


இந்நிலையில், மக்களவை தேர்தலில் தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. 4 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்பது குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா தெரிவித்திருந்தார். 


இதையடுத்து, தற்போது அதிமுக கூட்டணியில், தேமுதிக-வுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கள்ளக்குறிச்சி, திருச்சி, வடசென்னை, விருதுநகர் ஆகிய 4 தொகுதிகளில் தேமுதிக போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது தேமுதிக. 


தேமுதிக வேட்பாளர் பட்டியல் விவரம்:-


கள்ளக்குறிச்சி - எல்.கே.சுதீஷ்


வடசென்னை - அழகாபுரம் மோகன்ராஜ்


திருச்சி - டாக்டர் இளங்கோவன்


விருதுநகர் - ஆர்.அழகர்சாமி