ஸ்டாலினை நம்பி வாக்களித்தால் ஏமாந்து போவீர்கள் என வடசென்னை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த சில மாதங்களாக உடல்நலம் குறைவால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தார் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த். சமீபத்தில் மக்களவை தேர்தல் அறவிக்கப்பட்ட நிலையில் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைக்காக தமிழகம் திரும்பினார், எனினும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை, அவரால் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபடமுடியவில்லை என செய்திகள் பரவின.


இதற்கிடையில் பாஜக உடனானா கூட்டணி பேச்சுவார்த்தை, திமுக உடனான கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை என தமிழகத்தையே சில தினங்களுக்கு அதிரவைத்தார். இறுதியாக அதிமுக-பாஜக-பாமக கூட்டணியில் இணைந்து வரும் மக்களவை தேர்தலை சந்திக்கவுள்ளதாக அறிவித்தார். எனினும் விஜயகாந்த் இடைப்பட்ட காலத்தில் தனது தொண்டர்களை பார்க்க அனுமதிக்கப்படவில்லை.



பிரசார கூட்டங்களில் விஜயகாந்த் கலந்து கொள்ளாததும், பொது வெளியில் பேசாததும் அக்கட்சி தொண்டா்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.


இந்நிலையில் தற்போது மக்களவை தேர்தல் பிரசாரம் தமிழகத்தில் நிறைவடைய உள்ள நிலையில், சென்னையில் அ.தி.மு.க. உள்பட கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து விஜயகாந்த் பிரசாரத்தில் ஈடுபட்டார். 


நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தே.மு.தி.க. வடசென்னை வேட்பாளர் அழகாபுரம் ஆர். மோகன்ராஜை ஆதரித்தும், கூட்டணி கட்சி வேட்பாளர்களான அ.தி.மு.க. தென்சென்னை வேட்பாளர் ஜெயவர்தன் மற்றும் பா.ம.க. மத்திய சென்னை தொகுதி வேட்பாளர் சாம்பாலை ஆதரித்தும் மூன்று நாடாளுமன்ற தொகுதிகளிலும் பிரசார பயணம் மேற்கொள்கிறார் என முன்னாதக கட்சி தலைமை அறிவித்திருந்தது.


இந்நிலையில் இன்று வடசென்னை தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட விஜயகாந்த், ஸ்டாலினுக்கு வாக்களிக்க வேண்டாம். அவருக்கு வாக்களித்தால் ஏமாந்து போவீர்கள் என தெரிவித்தார்.


திமுக-விற்கு எதிராக விஜயகாந்த் பேசியது ஒருபக்கம் இருந்தாலும், மறு பக்கம் தொண்டர்களை நேரில் சந்தித்து பிரசாரத்தில் ஈடுபட்டு இருப்பது அக்கட்சியின் தொண்டர்களிடம்  மிகுந்த உற்சாகத்தினை ஏற்படுத்தி உள்ளது.