தேமுதிகவின் 8 முக்கிய கோரிக்கைகள் - கவனிக்குமா தமிழக அரசு?
விவசாயிகளுக்கு இழப்பீடு, பொங்கல் பரிசு ரூ.3000 உள்ளிட்ட 8 கோரிக்கைகளை, தேமுதிக தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளது.
விரைவில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் கட்சியின் உட்கட்டமைப்பு மற்றும் நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து, அனைத்து மாவட்ட செயலாளர்களுடனும் அக்கட்சி தலைமை கலந்தாலோசித்தது. இதனையடுத்து 9 தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
ALSO READ | நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்து போட்டி-விஜயகாந்த் அறிவிப்பு !
கட்சி நிர்வாகிகள் உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ள தேமுதிக, வட கிழக்குப் பருவமழையால் டெல்டா உள்ளிட்ட பிற மாவட்டங்களில் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ள விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. தமிழர் திருநாள் தைப்பொங்கல் விழா மிகச்சிறப்பாக கொண்டாடப்படும் சூழலில், குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 3 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள தேமுதிக, தமிழகத்தில் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருவதாக கவலை தெரிவித்துள்ளது.
ஆசிரியர்களே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது மிகப்பெரிய குற்றம் எனக் கூறியுள்ள தேமுதிக, இத்தகைய சம்பவத்தில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. கொரோனா வைரஸால் பல லட்சக் கணக்கான இளைஞர்கள் வேலை வாய்ப்பை இழந்து விட்டதாகவும், அதுகுறித்து மாநில அரசு கவனம் செலுத்த வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளது. தற்போது ஒமிக்கிரான் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியிருக்கும் சூழலில், முன்கூட்டியே பாதுகாப்பு நடவடிக்கைகளையும், விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தேமுதிக கேட்டுக்கொண்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடி உயர்த்த வேண்டும், பெட்ரோல், டீசல் விலைகளை குறைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் உரிய நவடிக்கை எடுக்க வேண்டும், சிமெண்ட், ஜல்லி உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலையேற்றத்தையும் கட்டுபடுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைளையும் தேமுதிக தமிழக அரசுக்கு முன்வைத்துள்ளது. மேலும், உள்ளாட்சித் தேர்தலில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக தேமுதிக குற்றம்சாட்டியுள்ளது. இதனால் நடைபெற இருக்கும் நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் இதுபோன்ற செயல்கள் நடைபெறாத வண்ணம் மாநில தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தேமுதிக கேட்டுக்கொண்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR