சென்னை சாலிகிராமத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வீடு ஜூலை 26 ஆம் தேதி ஏலத்துக்கு வருவதாக அறிவிப்பு!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்தின் வீடு மற்றும் மதுராந்தகம் அருகே மாமண்டூரில் உள்ளஅவருக்குச் சொந்தமான ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி ஆகியவை ஜூலை 26 தேதி ஏலம் விடப்படுகிறது. விஜயகாந்த் - பிரேமலதா அண்ணா சாலையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வாங்கிய கடனை முறையாக செலுத்தவில்லை மற்றும் அதற்கான வட்டியையும் செலுத்தவில்லை என்ற காரணத்தால் வங்கி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. 


மதுராந்தகம் மாமண்டூரில் உள்ள விஜயகாந்தின் ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியும் ஏலத்திற்கு வருகிறது. சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்தின் 4,651 சதுர அடி நிலம், வணிக கட்டிடமும் ஏலத்துக்கு விடப்படுகிறது. 


ரூ.5.52 கோடி கடன் பாக்கிக்காக விஜயகாந்தின் வீடு, கல்லூரியை ஏலத்திற்கு விடுவதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அறிவித்துள்ளது. கடன் பாக்கி, வட்டி, இதர செலவுகளை வசூலிக்க விஜயகாந்த் சொத்துக்கள் ஏலம் விடப்படுவதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.