தமிழ்நாட்டில் பிரதான கட்சியாக இருக்கும் தேமுதிக வரும் நாடாளுமன்ற தேர்தலில் எந்தக் கூட்டணியில் இடம் பெறும் என்ற கேள்வி எழுந்துள்ளது. கட்சி தொடங்கப்பட்டவுடன் தனித்து களம் கண்ட தேமுதிக, 2011 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக அமர்ந்தாலும் அதன்பிறகு நடைபெற்ற சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் அக்கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்ட ஒரு வேட்பாளர்கள் கூட வெற்றி பெறவில்லை. இதனால், அக்கட்சிக்கான செல்வாக்கும் குறைந்து வாக்கு சதவீதமும் ஒரு விழுக்காட்டுக்கும் கீழாக சென்றுவிட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | அயோத்தி பாபர் மசூதி கட்டுமானம் கிடப்பில் போடப்பட்டது! அறக்கட்டளையின் அறிவிப்பு


குறிப்பாக விஜயகாந்த் ஆக்டிவ் அரசியலில் இருந்து ஒதுங்கிய பிறகு அக்கட்சியால் அரசியல் களத்தில் வீரியமாக செயல்படமுடியவில்லை. ஏறத்தாழ முடங்கியிருக்கிறது என்ற நிலைக்கு தேமுதிக வந்துவிட்டது என்று பேசுமளவிற்கு வந்துவிட்டது. காரணம் துடிப்பான செயல்பாடுகள் கட்சியில் இல்லை. தேர்தல் நேரத்தில் மட்டும் ஏதாவது அறிக்கை மற்றும் அரசியல் சுற்றுப்பயணத்தை பிரேமலதா விஜயகாந்த் மேற்கொள்வது வாக்காளர்கள் மத்தியில் எடுபடவில்லை. மக்கள் நலன் சார்ந்த துடிப்பான போரட்டங்களையும் அக்கட்சி எடுப்பதில்லை. இதனால் அரசியல் களத்தில் மிகப்பெரிய சரிவை சந்தித்திருக்கிறது தேமுதிக. கூட்டணி கட்சிகளான அதிமுக மற்றும் பாஜகவுடன் அணுசரணையாகவும் செல்வதில்லை.


சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் கூட்டணி சீட்டு தொடர்பான பேச்சுவார்த்தைகளை மிகவும் இழுப்பறி நிலைக்கு தேமுதிக கொண்டு சென்றதால் அந்த இரண்டு கட்சிகளும் அதிருப்தி நிலைக்கு சென்றுவிட்டன. இதனால், ஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும் ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தல்களில் தனித்தே தேமுதிக களம் கண்டது. அதில் பெரியளவு சோபிக்கவில்லை. இதனால், அரசியல் களம், தேர்தல் களம் என இரண்டிலும் தனித்துவிடப்பட்டிருக்கும் அக்கட்சி, பெரியளவில் தன்னை நிரூபித்துக் காட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. இதனால் தேமுதிகவை நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவும், பாஜகவும் அக்கட்சியை கூட்டணிக்கு அழைக்குமா? என்ற கேள்வியும் இப்போது எழுந்துள்ளது. 


ஏனென்றால் ஜூலை 18 ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சி கூட்டணி கூட்டத்துக்கு அக்கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இது தேமுதிகவுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பெரிய சமிக்கையாக பார்க்கப்படுவதால், இனி அக்கட்சிக்கு அரசியல் எதிர்காலம் இருக்குமா? என்ற பேச்சும் அடிபட தொடங்கியிருக்கிறது. 


மேலும் படிக்க | கருணாநிதி பேனா நினைவுச்சின்னம்... பின்வாங்குகிறதா திமுக அரசு... ஸ்டாலின் திட்டம் என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ