நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் மருத்துவர்களுக்கு தேமுதிக ஆதரவு தெரிவித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுப்பட்டுவரும் மருத்துவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக தேமுதிக பொருளாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் நேரில் சென்று தனது ஆதரவினை தெரிவித்தார்.


மேலும், மருத்துவர்களின் கோரிக்கைகள் நியாயமாக இருக்கும் பட்சத்தில், முதல்வர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடமும் , சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களிடமும் தேமுதிக சார்பாக வலியுறுத்துவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.



அதேவேளையில் மருத்துவர்களிடம், அனைவரும் போல், அவர்களும் தீபாவளி பண்டிகை கொண்டாட பரிசீலனை செய்ய வேண்டும். மேலும் கடவுளுக்கு நிகராக  மருத்துவர்களைத்தான் தெய்வமாக மக்கள் கருதுகிறார்கள், எனவே உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுவது குறித்து நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.


முன்னதாக., காலமுறை ஊதிய உயர்வு, பதவி உயர்வு வழங்குதல், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவப் பணியிடங்கள் உயர்த்துதல், மருத்துவ மேற்படிப்புகளில் இட ஒதுக்கீடு என்ற நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். 


இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்புடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து ஆறு வாரங்களுக்குள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக தமிழக அரசு உறுதியளித்தது. ஆனால் உறுதியளித்தபடி தமிழக அரசு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்று குற்றம்சாட்டி, தமிழகம் முழுவதும் 18,000 அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும் எண்ணற்ற நோயாளிகள் சிகிச்சைக்காக தவிக்கும் நிலை உருவாகியுள்ளது.