ரூ.2000 நிதியுதவி திட்டத்தின் மூலம் ஆளும் கட்சியினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவதாக திமுக புகார்
ரூ.2000 நிதியுதவி வழங்கும் திட்டத்தின் மூலம் ஆளும் கட்சியினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவதாக திமுக புகார் அளித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் அவை விதி எண் 110-ன் கீழ் அறிவிப்பு வெளியிட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,‘‘ கஜா புயலாலும், வறட்சியாலும் பாதிக்கப்பட்டுள்ள 60 லட்சம் அமைப்புசாரா தொழிலாளர் குடும்பங்களுக்கு ஒருமுறை சிறப்பு நிதியுதவியாக ரூ.2000 வழங்கப்படும்’’ என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். இந்த புதிய நலத்திட்டத்திற்கு ரூ.1,200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும். இந்த தொகை நேரடியாக அவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் எனவும் கூறியிருந்தார்.
இன்று ஏழை குடும்பங்களுக்கு ரூ.2000 நிதியுதவி வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் தொடங்கி வைத்தார்.
இந்தநிலையில், வறுமைக்கோட்டுக்கு கீழ் இருப்பவர்களுக்கு வழங்கப்படுவதாகக் கூறி ஆளும் கட்சியினர் வாக்கு சேகரிப்புக்காக 2000 ரூபாய் அளிப்பதைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், இதன் மீது தேவையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர்.