குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்த திமுக தோழமை கட்சிகள் கூட்டத்தில் திட்டமிட்டுள்ளனர்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னையில் இன்று மு.க. ஸ்டாலின் தலைமைலான திமுக கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்து கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். தற்போதைய அரசியல் நிலவரம், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக அடுத்தகட்ட போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை கையெழுத்து இயக்கம் நடத்த முடிவு செய்யப்பட்டது.


இக்கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின், ‘சிஏஏ, என்ஆர்சி மற்றும் என்பிஆர் ஆகியவற்றுக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடக்க உள்ளது. கையெழுத்து இயக்கத்திற்கு பிறகு அதன் பிரதிகளை ஜனாதிபதிக்கு அனுப்ப உள்ளோம். நேரம் கிடைத்தால் ஜனாதிபதியை நேரில் சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்துவோம். 


காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அருகே பெரியார் சிலை உடைக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த அவர், 95 ஆண்டுகள் தமிழகத்திற்காக போராடிய பெரியாரின் சிலை இழிவுப்படுத்தப்படுவது வெட்கத்துக்குரியது என்றார். இந்த விவகாரத்தில் அரசு விரைவாக நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினார். 5-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.