தமிழக ஆளுநர் ஆய்வு நடத்த கறுப்புக்கொடி காட்டி எதிர்ப்பு!!
மாநில சுயாட்சிக்கு விரோதமாக ஆய்வு செய்து வரும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் எதிராக திமுக மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் கறுப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, விசிகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு மேற்கொள்ளக் கூடாது என்று திமுக மற்றும் விடுதலை சிறுத்தை கட்சிகள் கருப்பு கொடியுடன் பேரணி நடத்தி வருகின்றனர். இந்த பேரணி கடலூர் சுற்றுலா மாளிகையில் தங்கியுள்ள ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நோக்கி செல்ல இருந்தனர்.
ஆனாலும் திமுக மற்றும் விடுதலை சிறுத்தை கட்சிகள் கருப்பு கொடியுடன் பேரணி நடத்தி வரும் நிலையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கடலூர் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். பொதுமக்கள் கூறிய குறைகளை தனது குறிப்பில் குறித்துக் கொண்டார். மேலும் கடலூர் மாவட்டத்தில் புதிய பேருந்து நிலையத்தில் தூய்மை இந்திய திட்டப்பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆய்வுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக்கொடி கட்டி போராட்டம் நடத்தி வருகிறது திமுக. அவர்களின் எதிர்ப்பையும் மீறி ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.