வரும் 22-ம் தேதி மாநிலம் தழுவிய உண்ணா விரத போராட்டம் நடத்துவதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முதல்வர் எடப்பாடி பெரும்பான்மை நிரூபிக்க சட்டசபை கூடியதும் திமுக உள்ளிட்ட எதிர்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். மதியம் அவை மீண்டும் கூடியதும், தொடர்ந்து சபையில் தர்ணா போராட்டம் 20 தி.மு.க.,எம்.எல்.ஏ.,க்கள் குண்டுகட்டாக வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். சட்டசபையில் இருந்து வெளியேற மறுத்த ஸ்டாலினை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். இதனையடுத்து , அவைக்காவலர்கள் ஸ்டாலின், துரை முருகன் உள்ளிட்ட நபர்களை குண்டுகட்டாக தூக்கி அவையில் இருந்து வெளியேற்றினர். அப்போது ஏற்பட்ட அமளியில் ஸ்டாலினின் சட்டை கிழிக்கப்பட்டது. 


பிறகு சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள காந்தி சிலை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதன் காரணமாக போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் அனைவரும் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


இத்தகைய பரபரப்பான சூழலுக்கிடையே திமுக எம்எல்ஏ-க்களுடன் அக்கட்சியின் செயல்தலைவர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். அதில் சட்டமன்றத்தில் திமுகவினர் மீது தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாகவும் பேரவை நிகழ்வுகளை கண்டித்தும் வரும் 22-ம் தேதி தழிழகம் முழுவதும் திமுக உண்ணாவிரத போராட்டம் நடத்தயிருப்பதாக மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.