மு.க.ஸ்டாலின் செயல் தலைவராக இருக்கும் வரை திமுக வெற்றி பெற இயலாது என முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தொலைக்காட்சி ஒன்றுக்கு தொலைபேசி வாயிலாக அளித்த பேட்டியில் மு.க.அழகிரி கூறியது:-


ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் டெபாசிட் இழக்கும் அளவுக்கு திமுக தோல்வி அடைந்தது ஏன்? இதில் இருந்தே தெரிகிறது ஸ்டாலின் எவ்வாறு செயல்படுகிறார் என்பது. மேலும் ஸ்டாலின் கூட இருப்பவர்களின் செயல்பாடுகள் சரியில்லை. 


தினகரன் வெற்றி பெற்றிருப்பது குறித்து கேட்டதற்கு, தினகரன் தொடக்கம் முதலே களப்பணி செய்து வெற்றி பெற்றுள்ளார். சுயேச்சையாக போட்டியிட்ட தினகரனின் சின்னம் வாக்குப்பெட்டியில் 33வது எண்ணில் இருக்கும் குக்கர். ஆனால், மக்களுக்கு மிகவும் பரிச்சயமான உதய சூரியன், இரட்டை இலைச் சின்னம் ஆகியவற்றை எல்லாம் தாண்டி 33வது இடத்தில் இருக்கும் குக்கர் சின்னத்துக்கு வாக்குகள் விழுந்துள்ளன. இதற்கு காரணம், மக்களுக்கு இவர்கள் மீது வெறுப்பு இருக்கிறது என்று அர்த்தம்.


பணம் மட்டும் இருந்தால் வேட்பாளர் ஜெயிக்க முடியாது. தோல்வி அடைந்த உடன், பண நாயகம், ஜனநாயகம் தோல்வி என்று கூறுவது வழக்கமாகவிட்டது. 


மேலும் பேசுகையில், புதிதாக வருபவர்களுக்கு பதவி கொடுப்பதை நிறுத்த வேண்டும். கட்சியில் இருந்து வெளியேறியவர்களையும், துரோகம் செய்தவர்களையும், கட்சியில் மீண்டும் சேர்த்து பொறுப்பு கொடுப்பதை எப்போது நிறுத்துகிறார்களோ அப்போதுதான் திமுகவின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும்.