சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதேநேரத்தில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டு உள்ளது. மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டன. அதில் ஒன்று தான் மதுபானக் கடைகளை திறந்துக்கொள்ளலாம். மத்திய அரசின் இந்த தளர்வை அடுத்து பல மாநிலங்கள் மதுக்கடைகளை திறந்துள்ளது. அதேபோல தமிழகமும், இன்று (மே 7) முதல் முழுவதும் பாதுகாக்கப்பட்ட பகுதிகள் தவிர்த்து அனைத்து டாஸ்மாக் கடைகளும் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழக அரசின் அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மாநிலம் முழுவதும் கொரோனா வேகமாக பரவி வரும் சூழலில் தமிழக அரசின் முடிவை சரியானது அல்ல பல தரப்பினரும் எதிர்த்து வருகின்றனர். 


இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் தனதுட்விட்டர் பக்கத்தில் நேற்று ஒரு வீடியோ வெளியிட்டார். அதில், கொரோனா குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாமல், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாமல், நிவாரணம் - மீட்பு - மறுவாழ்வு பற்றிக் கவலைப்படாமல், திடீரென மதுபானக் கடைகளைத் திறப்பதில் மட்டும் ஆர்வத்துடன் செயல்படும் தமிழக அரசைக் கண்டித்து மே 7-ம் தேதி ஒருநாள் கருப்புச் சின்னம் அணிந்து எதிர்ப்பு தெரிவிப்போம் எனக் கூறியிருந்தார்.


இதனையடுத்து, இன்று தனது இல்லத்தில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குடும்பத்துடன் கருப்பு சட்டை அணிந்து, டாஸ்மாக் கடை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கையில் பதாகையுடன் போராட்டம் நடத்தினார். 


 



மேலும் மற்றொரு ட்விட்டில், "நோய்த்தொற்றின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது மதுக்கடைகளைத் திறந்து, சமூகத்தின், குடும்பங்களின் அமைதியைக் குலைக்கத் தயாராகும் #குடியைக்கெடுக்கும்அதிமுக அரசுக்கு நம் எதிர்ப்பைக் காட்டுவோம்.


'கொரோனாவை ஒழிப்பதில் தோல்வி அடைந்துவிட்ட அ.தி.மு.க. அரசைக் கண்டிக்கிறோம்’ என முழங்குவோம்" எனப் பதிவிட்டிருந்தார்.