பொதுமக்களுக்கு இடையூறாக பதாகைகள் வைக்கக்கூடாது என திமுக தலைவர் MK ஸ்டாலின் தனது தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சாலைகளில் வாகன ஓட்டுனர்களுக்கும் மக்களுக்கும் இடையூறாக பேனர் வைக்க அரசியல் கட்சிகளுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவினை வரவேற்று திமுக தலைவர் MK ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


இந்த வழக்கு தொடர்பாக அடுத்த விசாரணை வரும் ஜனவரி 4-ஆம் நாள் நடைபெறவுள்ள நிலையில், விதிகளையும், நீதிமன்ற உத்தரவுகளையும் பின்பற்றுவோம் என தமிழக அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


இந்நிலையில், திமுக தலைவர் MK ஸ்டாலின் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது,..



“வரவேற்கத்தக்க ஒன்று!


பொதுமக்களுக்கு இடையூறாக பதாகைகள் வைக்கக்கூடாது என நான் பலமுறை வலியுறுத்தியிருக்கிறேன். ஆனாலும், சில இடங்களில் வைக்கப்படுவதை அறிகிறேன், அதனை கழகத்தினர் முழுமையாக தவிர்த்திட வேண்டும். அது சட்டப்படியானது மட்டுமல்ல. பொதுமக்களுக்கு நன்மை பயக்கும் செயல்!” என பதிவிட்டுள்ளார்.