உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை இளவேனில் வளரிவனுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலகச் சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை PV சிந்து தங்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த நிலையில், தற்போது மேலும் ஒரு இந்திய வீராங்கனை குறிப்பாக தமிழக வீராங்கனை தங்கம் பெற்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.


பிரேசில் நாட்டில் இன்று நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் இறுதிப் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் 251.7 புள்ளிகள் எடுத்து தமிழக வீராங்கனை இளவேனில் வளரிவான் தங்கம் வென்றுள்ளார். தங்கம் வென்றுள்ள இளவேனில் வளரிவானுக்கு தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது., "பிரேசிலில் நடைபெற்ற உலககோப்பை துப்பாக்கி சுடுதல் இறுதிப்போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை @elavalarivan -க்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள் 



சர்வதேசப் போட்டிகளில் மென்மேலும் பல பதக்கங்களைப் பெற்று தமிழகத்திற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்க்கவும் வாழ்த்துகிறேன்!" என குறிப்பிட்டுள்ளார்.


ஏற்கனவே கடந்த ஆண்டு நடைபெற்ற ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்றவர் தான் இந்த இளவேனில் வளரிவன். 20 வயதான இளவேனில் வளரிவான் துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வெல்லும் மூன்றாவது வீராங்கனை என்ற பெருமை பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக இந்தியாவின் அபூர்வி சாந்தலா, அஞ்சலி பகவத் ஆகியோர் துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.