சென்னை: திராவிட முன்னேற்ற கழகம் (DMK) தலைவர் மு.க. ஸ்டாலின் மே 7 ஆம் தேதி தமிழக முதல்வராக பதவியேற்க உள்ளார். வெள்ளிக்கிழமை காலை 11:00 மணிக்கு ராஜ் பவனில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. தமிழ் நாட்டில் புதிய அரசாங்கம் அமைக்கப்பட உள்ள நிலையில், ஆளுநர் பன்வரிலால் புரோஹித் தமிழக சட்டசபையை மே 3 ம் தேதி கலைத்தார். இந்த தேர்தலில் ஆளும் கட்சி அதிமுக (All India Anna Dravida Munnetra Kazhagam) தோல்வியை தழுவியதால், தனது முதல்வர் பதவியை எடப்பாடி பழனிசாமி (Edappadi K. Palaniswami) ராஜினாமா செய்தார். மேலும் புதிய முதலமைச்சராக பதவியேற்க உள்ள மு.க. ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தநிலையில், தமிழகத்தில் ஆட்சி அமைக்க நாளை ஆளுநர் பன்வரிலால் புரோஹித் (Governor Banwarilal Purohit) அவர்களை சந்தித்து உரிமை கோருகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். இதனையடுத்து மு.க.ஸ்டாலின் பதவியேற்பு விழா ஏற்பாடுகள் குறித்து தலைமைச் செயலகத்தில் அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளனர். 


இன்று மாலை திமுக தலைமையில் எம்எல்ஏக்கள் கூட்டம் கூட்டப்படுகிறது. அக்கூட்டத்தில், சட்டப்பேரவை கட்சித் தலைவராக மு.க. ஸ்டாலின் (MK Stalin) தேர்வு செய்யப்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


ALSO READ |  சறுக்கும் பாமக, தேமுதிக! நாதக முன்னேற்றம்! அரசியல் கட்சிகள் பெற்ற ஓட்டு சதவீதம் எவ்வளவு?


2021 ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் (Tamil Nadu Assembly Elections 2021) மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி வெற்றி பெற்றது. தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில், திமுக 133 இடங்களிலும், அதிமுக 66 இடங்களிலும், இந்திய தேசிய காங்கிரஸ் 14 இடங்களையும், பாரதீய ஜனதா கட்சி 4, பாட்டாளி மக்கல் கட்சி 5, விடுதலை சிறுதைகள் கட்சி 4, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 2 மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 இடங்களையும் வென்றது.


தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து, கொரோனா தடுப்பு (Corona Prevention Measures) நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் ராஜிவ் ரஞ்சன் உள்ளிட்டமூத்த ஐஏஎஸ் அதிகாரிகளுடன் இரண்டாவது நாளாக இன்றும் திமுக தலைவர் ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார். 


ALSO READ |  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மே 7ம் தேதி முதல்வராக பதவி ஏற்கிறார்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR