தமிழகத் தேர்தல் முடிவுகளில் திமுக வெற்றி நிச்சயமாகிவிட்ட நிலையில், தமிழகம் புதிய கட்சியின் ஆட்சியையும் புதிய முதல்வரையும் எதிர்பார்த்து காத்திருக்கின்றது. தேர்தலுக்குப் பிறகான கருத்துக்கணிப்புகள் கணித்தபடியே, பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற்ற திமுக மாபெரும் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க தயாராகவுள்ளது.
சுமார் 10 ஆண்டு காலமாக, எதிர்க்கட்சியில் இருந்து அரசாங்கத்தின் நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்து, விமர்சனங்களை வீசி, நியாயங்களைக் கோரி வந்த மு.க. ஸ்டாலின் தற்போது தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ளார்.
தமிழ்நாட்டில் (Tamil Nadu) திமுக-வின் பரம எதிரியான அதிமுக-வை எதிர்த்து அமோக வெற்றி பெற்றுள்ளது திமுக. 68 வயதான ஸ்டாலின் (MK Stalin) முதல் முறையாக முதல்வராக பதவியேற்க உள்ளார்.
இதற்கிடையில், அதிமுக அமைச்சரவையில் அமைச்சர்களாக பதவியில் இருந்த பல அமைச்சர்கள் இந்த தேர்தலில் தோல்வியைக் கண்டுள்ளனர். மேலும், மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் போன்ற கட்சிகளால் பெரிதாக எதையும் சாதிக்க முடியவில்லை. இக்கட்சிகளின் ஓரளவு தாக்கமாவது இந்த தேர்தல்களில் இருக்கும் என நினைக்கப்பட்ட நேரத்தில் அது வெறும் கனவாகவே போனது.
இதற்கிடையில், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களித்த தமிழக மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி (PM Modi) நன்றி தெரிவித்துள்ளார். மாநில நலனுக்காகவும், தமிழ் கலாச்சாரத்தை வளர்ப்பதற்காகவும் தனது கட்சி தொடர்ந்து செயல்படும் என்று அவர் மேலும் கூறினார்.
ALSO READ: DMK மூத்தத் தலைவர் துரைமுருகன் காட்பாடி சட்டமன்றத் தொகுதியில் வெற்றி
"கடினமாக உழைத்த தொண்டர்களுக்கு எனது பாராட்டுகள்" என்று அவர் கூறினார்.
கோயம்புத்தூர் தெற்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக தேசிய மகளிர் பிரிவுத் தலைவர் வானதி சீனிவாசனிடம் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் 1,728 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார். மாறி மாறி இருவரும் முன்னிலையில் இருந்த நிலையில், இறுதியாக வானதி வெற்றி பெற்றார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல், இம்முறை ஐந்துமுனைப் போட்டியாக உள்ளது என கூறப்பட்டது. அ.தி.மு.க., தி.மு.க. (DMK), அ.ம.மு.க., ம.நீ.ம ஆகிய கட்சிகள் அவர்களுடைய கூட்டணிக் கட்சிகளுடனும் நாம் தமிழர் கட்சி தனித்தும் தேர்தலை எதிர்கொண்டார்கள். மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள், திராவிடக் கட்சிகளைத் தாண்டி சிந்திக்க தயாராக உள்ளார்கள் என பல பேச்சுகள் இருந்தன.
எனினும், தேர்தல் முடிவுகள் அப்படி எதுவுமே நடக்கவில்லை என்றே சுட்டிக்காட்டுகிறது. தமிழகத்தில் முக்கிய போட்டி அதிமுக, திமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளுக்கு இடையில் மட்டும்தான் உள்ளது என்பதை முடிவுகள் தெள்ளத் தெளிவாகக் காட்டுகின்றன.
ALSO READ: மக்கள் திருப்தி அடையும் வகையில் ஆட்சி செய்யுங்கள்: ஸ்டாலினுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR