சென்னை: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இருந்து சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370 ஐ நீக்கியது. அப்பொழுது எந்தவித கலவரமும் ஏற்படாமல் இருக்க முன்னாள் முதல் மந்திரி பரூக் அப்துல்லா மற்றும் உமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முப்தி ஆகியோர் மீதும் பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வீட்டு காவலில் வைக்கப்பட்டனர். இதற்கு நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை பதிவு செய்தனர். அப்பொழுது திமுக தலைவர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு கண்டனத்தை பதிவு செய்திருந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தநிலையில், இன்று  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார், அதில் அவர், ஜம்மு-காஷ்மீரில் மூடப்ப்பட்டிருக்கும் ஜனநாயகத்தின் கதவுகளை பிரதமர் மோடி திறக்க வேண்டும்.  காஷ்மீர் அரசியல் தலைவர்களை சிறையில் வைத்திருப்பதை கைவிட வேண்டும் என கூறியுள்ளார். அனைத்து தரப்பு மக்களும் எந்த தடையுமின்றி ஜனநாய காற்றை சுவாசிக்க இடமளிக்க வேண்டும்.


பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உமர் அப்துல்லா, கெபூபா முப்தி கைது செய்யப்பட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அவர், அனைத்து தரப்பு மக்களும் எந்த தடையுமின்றி ஜனநாய காற்றை சுவாசிக்க இடமளிக்க வேண்டும். புதிய புதிய காரணங்களை கண்டுபிடித்து காஷ்மீர் அரசியல் தலைவர்களை சிறையில் வைத்திருப்பதை கைவிட வேண்டும் என கூறியுள்ளார்.


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.