பொன்விழா நாயகன் திமுக திமுக தலைவர் கருணாநிதி மறைந்தார். தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த ஒரு வருடமாக வயது முதிர்வு மற்றும் உடல் நிலை சோர்வு காரணமாக திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வந்தார். இதனையடுத்து கடந்த ஜூலை 27-ஆம் நாள் இரவு அவருக்கு இரத்த அழுத்தக் குறைவு ஏற்பட்டதால், காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.


கடந்த பத்து நாட்களாக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் இருக்கும் கருணாநிதியின் உடல் நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், இன்று காவேரி மருத்துவமனை திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில், கருணாநிதியின் உடல் உறுப்புகளில் மிகவும் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. தற்போது அவர் தீவிர கண்காணிப்பில் உள்ளார். அடுத்த 24 மணி நேரத்திற்கு பின்பு தான் அவரின் உடல் நிலை குறித்து எந்த முடிவையும் சொல்ல முடியும் என மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டது.


இன்று மாலை திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு மிகவும் கவலைக்கிடம் என 4.30 மணிக்கு காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.


இதயனைடுத்து, காவேரி மருத்துவமனை வளாகத்தை நோக்கி திமுக தொண்டர்கள் குவித்தனர். இதனால் மருத்துவமனை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. போக்குவரத்து மாற்றி வேறு சாலைக்கு திருப்பி விடப்பட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டு உள்ளனர். கருணாநிதியின் இல்லமான கோபாலபுரத்திற்கு அவரது குடும்பத்தினர் வருகை புரிந்துள்ளனர்.


கருணாநிதியின் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.