புதிய வரைவு தேசிய கல்விக்கொள்கை குறித்து ஆராய திமுக சார்பில் குழு அமைக்கப்படும் என திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை: புதிய வரைவு தேசிய கல்விக்கொள்கை பற்றி ஆராய ஆய்வுக்குழு அமைந்துள்ளதாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். செம்மொழியாம் தமிழுக்கு அச்சுறுத்தலாக புதிய வரைவு தேசிய கல்விக்கொள்கை உள்ளது என ஸ்டாலின் குற்றசாட்டியுள்ளார்.


புதிய வரைவு தேசிய கல்விக் கொள்கையை ஆராய்ந்திட திமுக சார்பில் ஆய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பி, முன்னாள் அமைச்சர் பொன்முடி, முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, டாக்டர் ரவீந்திரநாத் உட்பட 8 பேர் ஆய்வுக்குழுவில் இடம் பெற்றுள்ளனர். இந்த குழு 10 நாட்களில் புதிய கல்வி கொள்கை குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய ஸ்டாலின் அறிவுறுத்தல்.


புதிய கல்விக்கொள்கை குறித்த ஆய்வு அறிக்கை கிடைத்தவுடன், திமுக சார்பில் மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகத்திடம் அறிக்கை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய கல்விக்கொள்கை குறித்து கருத்து தெரிவிக்க பொதுமக்கள், கல்வியாளர்கள், அரசியல் கட்சிகள் உள்ளிட்டோருக்கு மத்திய அரசு ஜூலை 31 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.