விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : பாமக கனவை தவிடுபொடியாக்க களத்தில் குதித்த திமுகவின் தளபதிகள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் வெற்றி பெறுவார் என அமைச்சர் பொன்முடி தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி எம்எல்ஏவாக இருந்த திமுகவின் புகழேந்தி காலமானதையடுத்து அந்த தொகுதிக்கு இந்திய தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் அறிவித்தது. ஜூலை 10 ஆம் தேதி வாக்குப்பதிவும், ஜூலை 13 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடக்க இருக்கிறது. தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக இத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்திருக்கும் நிலையில், ஆளும் கட்சியான திமுகவை எதிர்த்து பாஜக கூட்டணியில் இடம்பிடித்திருக்கும் பாமக களமிறங்கியுள்ளது. இந்த சூழலில் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பொறுப்பு அமைச்சர் பொன்முடி மற்றும் எம்பி ஜெகத்ரட்சகன் ஆகியோரிடம் திமுக தலைமை நியமித்திருக்கிறது. இருவரும் திமுகவை வெற்றி பெற வைக்கும் நோக்கில் தீவிரமாக தேர்தல் பணிகளை முன்னெடுத்துள்ளனர். இதுகுறித்து பேசிய அமைச்சர் பொன்முடி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வெற்றி பெறுவார் என கூறியுள்ளார்.
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு விக்கிரவாண்டியில் திமுக தேர்தல் அலுவலகம் இன்று காலை திறந்து வைக்கப்பட்டது. தேர்தல் அலுவலகத்தை ஜெகத்ரட்சகன் எம்பி ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அமைச்சர்கள் மஸ்தான், கணேசன் மற்றும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமான கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து தேர்தல் அலுவலகத்திலிருந்து திறந்த வெளி வாகனத்தில் விக்கிரவாண்டி நகரின் முக்கிய விதிகள் வழியாக தேர்தல் அலுவலகத்திற்கு சென்று திமுக விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வேட்பாளர் அண்ணியூர் சிவா அவர்கள் அவரது வேட்பு மனுவினை தாக்கல் செய்தார்.
மேலும் படிக்க | பேரனை கொன்று நாடகமாடிய தாத்தா கைது!
அப்போது, பேட்டியளித்த அமைச்சர் பொன்முடி, இடைத்தேர்தலில் தமிழக முதல்வர் அவர்களால் அறிவிக்கப்பட்ட அன்னியூர் சிவா அவர்கள் இன்று வேப்பு மனுவினை தாக்கல் செய்துள்ளார். ஒரு லட்சம் வாக்குகள் அதிகமாக பெற்று அதிகவாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். நானும் எம்பி ஜகத் அண்ணன் அவர்களும், ரவிக்குமார் அவர்களும் கடந்த இரண்டு நாட்களாக ஒவ்வொரு ஒன்றியமாக சென்று வாக்குகளை சேகரித்துள்ளோம். தலைவர் ஸ்டாலின் அவர்கள் மகளிருக்காக செய்துள்ள சாதனைகளுக்காகவே அதிகப்படியான வாக்குகளை பெற்று வெற்றி பெறுவோம்.
கடந்த தேர்தலில் புகழேந்தி அவர்கள் 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பிஜேபி, பாமக, அதிமுக இணைந்து போட்டியிட்டபோது 9 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று புகழேந்தி வெற்றி பெற்றார். தற்பொழுது மூன்று பெரும் எப்படி உள்ளார்கள் என்பது உங்களுக்கு தெரியும். கண்டிப்பாக ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அன்னியூர் சிவா அவர்கள் வெற்றி உறுதி" என கூறியுள்ளார்.
மேலும் படிக்க | விரைவில் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும் - கனிமொழி எம்பி நம்பிக்கை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ