திமுக, காங்கிரஸ் கூட்டணி உத்தேச வேட்பாளர் பட்டியல்! யார் யார் எந்த தொகுதி?
DMK Congress Alliance Candidates for Lok Sabha Election 2024 in Tamil Nadu: திமுக, காங்கிரஸ் கூட்டணியில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் இருக்கும் தொகுதிவாரியாக போட்டியிடும் வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் விவரம் வெளியாகியுள்ளது.
திமுக, காங்கிரஸ் கூட்டணி தமிழ்நாட்டில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. திமுக 21 தொகுதிகளிலும், காங்கிரஸ் புதுச்சேரி உள்ளிட்ட 10 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் தலா இரு தொகுதிகளிலும், மதிமுக, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி தலா ஒரு தொகுதியிலும் போட்டியிடுகின்றன. திமுக கூட்டணியில் தொகுதிகள் இறுதி செய்யப்பட்டுவிட்ட நிலையில், இப்போது வேட்பாளர்கள் இறுதி செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி திமுக, காங்கிரஸ் கூட்டணியில் தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் போட்டியிட வாய்ப்புள்ள உத்தேச வேட்பாளர்களின் பட்டியலை பார்க்கலாம்.
மேலும் படிக்க | கோவை: பிரதமர் மோடியின் பிரம்மாண்ட ரோடுஷோ! அப்போ நடந்த சுவாரஸ்ய சம்பவம்
திமுக சார்பில் போட்டியிட வாய்ப்புள்ள வேட்பாளர்கள்:
சென்னை வடக்கு - கலாநிதி வீராசாமி, சென்னை தெற்கு - தமிழச்சி தங்கபாண்டியன், மத்திய சென்னை - தயாநிதி மாறன், காஞ்சிபுரம் ( தனி) - செல்வம், அரக்கோணம் - ஜெகத்ரட்சகன் அல்லது வினோத் காந்தி, வேலூர் - கதிர் ஆனந்த், தருமபுரி - Dr . செந்தில் அல்லது ஆனந்த், திருவண்ணாமலை - அண்ணாதுரை அல்லது எஸ்.கே.பி கருணாகரன், சேலம் - செல்வகணபதி அல்லது பாபு, கள்ளக்குறிச்சி - கௌதம சிகாமணி, நீலகிரி (தனி) - A.ராஜா, பொள்ளாச்சி - சண்முக சுந்தரம், கோவை - மகேந்திரன் அல்லது கார்த்திக், தஞ்சாவூர் - அஞ்சுகம் பூபதி அல்லது பழனிமாணிக்கம், தூத்துக்குடி - கனிமொழி, தென்காசி (தனி) - தனுஷ்குமார், ஸ்ரீபெரும்புதூர் - டி.ஆர்.பாலு, பெரம்பலூர் - அருண் நேரு, தேனி - தங்க தமிழ்ச்செல்வன், ஈரோடு - பிரகாஷ், ஆரணி - எ.வ.வே.கம்பன் அல்லது தரணி வேந்தன் ஆகியோர் திமுகவில் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் சார்பில் போட்டியிட வாய்ப்புள்ள வேட்பாளர்கள்
திருவள்ளூர் (தனி) (காங்) - சசிகாந்த், கடலூர் (காங்) - கே.எஸ்.அழகிரி, மயிலாடுதுறை (காங்) - பிரவீன் சக்கரவர்த்தி, திருநாவுக்கரசர் அல்லது சுரண்யா ஐயர், சிவகங்கை (காங்) - கார்த்திக் சிதம்பரம், திருநெல்வேலி (காங்) - பீட்டர் அல்போன்ஸ், கிருஷ்ணகிரி (காங்) - செல்லகுமார், கரூர் (காங்) - ஜோதிமணி, விருதுநகர் (காங்) - மாணிக் தாகூர், கன்னியாகுமரி (காங்) - விஜய் வசந்த், புதுச்சேரி (காங்) - வைத்திலிங்கம்.
திமுக கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்கள்:
சிதம்பரம் (விசிக) - திருமாவளவன், விழுப்புரம் (விசிக) - முடிவு செய்யவில்லை, மதுரை (சிபிஎம்) - சு.வெங்கடேசன், திண்டுக்கல் (சிபிஎம்) - சச்சிதானந்தம், திருப்பூர் (சிபிஐ) - சுப்பராயன், நாகப்பட்டினம் (சிபிஐ) - செல்வராஜ், நாமக்கல் (கொமதேக) - சூரியமூர்த்தி, திருச்சி (மதிமுக) - துரை வைகோ, ராமநாதபுரம் (ஐயூஎம்எல்) - நவாஸ்கனி. விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் விழுப்புரம் தொகுதியை தவிர மற்ற தொகுதிகளில் திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டன.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ