நாடாளுமன்ற தேர்தலையொட்டி கோவை வந்த பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்ட ரோடுஷோ நிகழ்ச்சி வெகு சிறப்பாக தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மாலை சுமார் 5.30 மணி அளவில் தனி விமானம் மூலம் பிரதமர் கோயம்புத்தூர் விமான நிலையம் வந்தார். பின்பு, சுமார் 5.45 மணி அளவில் பேரணி துவங்கும் இடமான சாய்பாபா கோவில் சந்திப்பிற்கு பிரதமர் வந்தடைந்தார். பாஜகவினரின் உற்சாக வரவேற்போடு அங்கிருந்து பேரணி துவங்கியது. இந்த பேரணியின் போது பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் சாலையின் இருபுறமும் நின்று மலர்களை தூவி வரவேற்றனர்.
பாஜக சார்பில் ஆங்காங்கே மேடைகள் அமைக்கப்பட்டு கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது. பேரணியின் நிறைவாக ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தலைமை தபால் நிலையம் அருகே, 1998 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் குண்டுவெடிப்பின் போது உயிரிழந்த பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பிரதமர் மலரஞ்சலி செலுத்தினார். பிரதமரின் வாகன பேரணி நிகழ்ச்சிக்காக கோவை மாநகரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குறிப்பாக பேரணி நடைபெறும் மேட்டுப்பாளையம் சாலை மற்றும் ஆர்.எஸ்.புரம் பகுதிகளில் ஐந்து அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
மேலும் படிக்க | திமுகவில் வாரிசு அரசியலை எதிர்த்த வைகோ, துரை வைகோவை திருச்சி வேட்பாளராக அறிவித்தார்
இந்த நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன், ஏ.பி.முருகானந்தம், ஹெச்.ராஜா, சுதாகர் ரெட்டி மற்றும் பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். பிரதமர் நரேந்திர மோடி பயணித்த திறந்தவெளி காரில் உடன் மத்திய இணையமைச்சர் எல் முருகன் மற்றும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உடனிருந்தனர். இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து இன்று இரவு பிரதமர் கோயம்புத்தூரில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். செவ்வாய்க்கிழமை காலை கோயம்புத்தூரிலிருந்து கேரளா புறப்படுவதாக திட்டமிடப்பட்டுள்ளது.
கோவையில் வாகன பேரணி ஏன்?
பாஜக இந்த முறை கோயம்புத்தூர் தொகுதியில் நேரடியாக களம் காண்கிறது. அந்த தொகுதியில் பாஜகவுக்கு செல்வாக்கு இருக்கிறது என நம்பப்படுவதால், அந்த தொகுதியில் நேரடியாக களம் கண்டு வெற்றி பெற வேண்டும் என நினைக்கிறது. அதேநேரத்தில் இந்த தொகுதியில் இம்முறை திமுகவும் நேரடியாக களம் காண்கிறது. பாஜகவுக்கு கோட்டை என கூறப்படுவதால் அதனை முறியடிக்க வேண்டும் என்ற முனைப்பில் திமுக இருக்கிறது. அதேநேரத்தில் அதிமுகவும் கோவை மாவட்டத்தில் நேரடியாக களம் காண இருப்பதால், மும்முனை போட்டி நிலவுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ