தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைப்பெற்றது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இக்கூட்டத்தினில் பொது செயலாளர் க.அன்பழகன், முதன்மை செயலாளர் துரைமுருகன், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணை பொது செயலாளர்கள் வி.பி. துரைசாமி, சுப்பு லெட்சுமி ஜெகதீசன், ஐ.பெரியசாமி, மற்றும் டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி., உள்ளிட்டோர் பங்கேற்றனர். 



இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட 11 தீர்மாணங்கள்...


  1. 2-ஜி வழக்கில் விடுதலை அடைந்துள்ள ஆ.இராசா மற்றும் கனிமொழி அவர்களுக்கும் பாராட்டுகள்

  2. “போக்குவரத்து தொழிலாளர் பிரச்சினையில், முதலமைச்சரே பேசி முடித்து வைக்க வேண்டும்”

  3. அரசியல் சட்டத்திற்கு எதிரான ஆளுநர் ஆய்வைத் தடுத்து நிறுத்திடுக!

  4. ஒகி புயல் நிவாரண நிதியை உடனே வழங்கிடுக!

  5. “மைனாரிட்டி” அரசால் தீராத பிரச்சினைகளில் திண்டாடும் தமிழகம்!

  6. “முத்தலாக்” விவகாரம்: இஸ்லாமியர்களின் அச்சத்தைப் போக்கிடுக!

  7. தேசிய மருத்துவ ஆணைய மசோதா, மோட்டார் வாகனத் திருத்த சட்டம் - மறு ஆய்வு செய்க.

  8. விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்க!

  9. தமிழகத்தின் கடன் சுமை- நிபுணர் குழு அமைத்து விசாரித்திடுக!

  10. உள்ளாட்சி அமைப்பு வார்டுகள் குளறுபடியான மறு சீரமைப்புக்குக் கடும் கண்டனம்.

  11. மாநில சுயாட்சி, சமூக நீதி, மதநல்லிணக்கம் ஆகிய இலட்சியங்களை வலியுறுத்தி “ஈரோடு மண்டல மாநாடு”!