Chennai Latest News Updates: சென்னை கிழக்கு கடற்கரை சாலை (Chennai ECR) கானத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நான்கு பெண்கள், இரண்டு ஆண்கள் என ஆறு பேர் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களின் காரை, மற்றொரு காரில் வந்த நான்கு பேர் கொண்ட இளைஞர்கள் துரத்தி சென்றுள்ளனர். இதன் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் அரசியல் ரீதியாகவும் ஆளும் திமுக மீது கடும் குற்றச்சாட்டுகளை எழுப்பி இருக்கிறது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த வெள்ளிக்கிழமை (ஜன. 24) அதிகாலை சுமார் 4 மணியளவில் சென்னை ஈசிஆர் முட்டுகாடு படகு குழாம் மேம்பாலம் மீது கோவளம் கடலில் பக்கிங்காம் கால்வாய் கலக்கும் முகத்துவாரத்தை பார்த்து ரசிப்பதற்காக, அந்த 4 ஆண்கள் ஒரு காரில் வந்துள்ளனர். அந்த ஆண்கள் நிறுத்திய காரின், பின்னால் புகார் அளித்த பெண்கள் சென்ற கார் நிறுத்தப்பட்டிருக்கிறது.


கிழக்கு கடற்கரை சாலையில் அன்று நடந்தது என்ன?


இந்நிலையில், முதலில் அங்கிருந்து அந்த கார் கிளம்பியிருக்கிறது. அப்போது அவர்களின் கார் முன்னாள் நின்றுகொண்டிருந்த இளைஞர்களின் காரை லேசாக உரசியதாக கூறப்படுகிறது. 
காரை உரசிவிட்டு மன்னிப்பு கூட கேட்கவில்லை என்பதால் அந்த காரை இளைஞர்கள் துரத்தி சென்றதாக கூறப்படுகிறது.


மேலும் படிக்க | சீமான், பாஜக-வின் கொள்கை பரப்பு செயலாளரா? - திருமாவளவன் கேள்வி!


இளைஞர்கள் உள்ள கார், கிழக்கு கடற்கரை சாலையில் தங்களை வெகு தூரமாக துரத்துவதை பார்த்த பெண்கள் பெரும் அச்சத்தில் அவர்களது செல்போனில் அந்த காட்சியை வீடியோவாக பதிவிட்டபடியே காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். நான்கு பெண்கள், இரண்டு ஆண்கள் சென்ற காரை இளைஞர்கள் துரத்துவது போன்று வீடியோ எடுத்த பெண்கள்  அதை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு கானத்தூர் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர்.


இளைஞர்களை பிடிக்க 2 தனிப்படை விரைவு 


இதுகுறித்து புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் விசாரணை மேற்கொண்டதில் முதற்கட்ட விசாரணையில், பெண்கள் சென்ற கார் இளைஞர்களின் காரை உரசி சென்றதாகவும், அதற்கு நியாயம் கேட்க இளைஞர் காரை நிறுத்த சொல்லியும் பெண்கள் சென்ற காரை நிறுத்தாமல் சென்றதாகவும், காரை நிறுத்தி நியாயம் கேட்கவே இளைஞர்கள் காரை துரத்தியதாகவும் தெரியவந்துள்ளது.


பெண்கள் வெளியிட்ட வீடியோவால் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ள நிலையில் போலீசார் அந்த இளைஞர்களை பிடிக்க தீவிரம் கட்டி வருகின்றனர். கேளம்பாக்கம் உதவி ஆணையாளர் வெங்கடேசன், கானத்தூர் ஆய்வாளர் முருகன் தலைமையில் இரண்டு தனிப்படை அனைத்து காரில் துரத்தியதாக கூறப்பட்ட இளைஞர்களை தேடி வருகின்றனர்.


எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு


வைரலாகி வரும் வீடியோவை பகிர்ந்து அதிமுக மற்றும் பாஜகவினர் ஆளும் திமுகவை கடுமையாக விமர்சித்துள்ளனர். அதிமுகவின் தொழில்நுட்பப் பிரிவினர் தங்களின் X பக்கத்தில் இதன் வீடியோவை பதிவிட்டு,"ஸ்டாலின் ஆட்சி நடத்தும் தமிழ்நாட்டில், சட்டம் இருக்கிறதா? காவல்துறை இருக்கிறதா?" என கடுமையாக சாடி உள்ளது. மேலும், பாஜகவின் தமிழக மாநில செயலாளர் வினோஜ் பி. செல்வம்,"திமுக கொடி கட்டிய காரில் வந்து பெண்களிடம் தகராறு செய்த SIR-கள் யார்?" என பதிவிட்டு திமுகவை நோக்கி எழுப்பி உள்ளார். 


மேலும் படிக்க | வன்னிய மக்களுக்கு துரோகம் செய்தவர் முக ஸ்டாலின் - அன்புமணி பரபரப்பு பேச்சு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ