அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள DMK பொதுச்செயலாளர் க.அன்பழகனின் உடல்நிலை குறித்து விசாரித்தார் மு.க.ஸ்டாலின்...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

DMK பொதுச்செயலாளராக பதவி வகித்து வருபவர் பேராசிரியர் க.அன்பழகன். இவர் சமீப காலமாக வயது முதிர்வு காரணமாக உடல்நிலை ஒத்துழைக்காத காரணத்தால் கட்சியின் முக்கிய கூட்டங்களை தவிர மற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்து வந்தார். இந்நிலையில், நேற்று இரவு அன்பழகனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை அண்ணாசாலையில் உள்ள கிரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.


அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவலறிந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்கு நேரில் சென்று, அவரது உடல்நிலம் விசாரித்து சென்றார்.