விரைவில் தீபாவளி 2024 பரிசு: குடும்ப அட்டைதாரர்களுக்கு வருகிறது புதிய அறிவிப்பு!
Good News For Tamil Nadu Ration Card Holders: மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்குவது குறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்படும் எனத்தகவல்.
DMK Government Diwali 2024 Gift: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் அனைவரும் சிறப்பாக கொண்டாடும் வகையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கியமான மகிழ்ச்சியான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இதைப்பற்றி பார்ப்போம்.
வருகிற தீபாவளி பண்டிகை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் அவர்களுக்கு முக்கியமான மகிழ்ச்சியான அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. தமிழ்நாட்டில் பொது திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக அரிசி இலவசமாகும், துவரம்பருப்பு சீனி கோதுமை சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மலிவு வழியில் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் ஏராளமானோர் பயன்பெற்று வருகின்றனர்.
மேலும் தமிழக அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு குடும்ப அட்டதாரர்களுக்கு பண்டிகைக்கு தேவையான இலவச அத்தியாவசிய பொருட்கள் மற்றும் பரிசுத்தொகை வழங்கி வருகிறது.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் மாதம் மாதம் பெண்களின் வங்கிக் கணக்கில் ரூபாய் 1000 செலுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கோடிக்கணக்கான பெண்கள் பயன்பெற்று வருகின்றனர். இவ்வாறு தமிழக மக்களுக்காக பல சலுகைகளை தமிழக அரசு வழங்கி வருகிறது.
இந்த நிலையில், வருகிற தீபாவளி பண்டிகை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பண்டிகைக்கு தேவையான அரிசி, கோதுமை, சர்க்கரை, பருப்பு வகைகள், மைதா, கடலை மாவு, ரவை, பாம் ஆயில், மண்ணெண்ணெய், மல்லி மிளகாய், வத்தல், சீரகம், மிளகு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ரேஷன் கடைகளில் குடும்ப ஆட்டதாரர்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என்று பல்வேறு கட்சித் தலைவர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில், இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில், வருகிற அக்டோபர் எட்டாம் தேதி நடைபெற உள்ள அமைச்சரவை கூட்டத்தில் தீபாவளி தொகுப்பாக மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்குவது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அனைத்து ரேஷன் குடும்ப அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க - சூப்பர் செய்தி! ரேஷன் கடைகளில் ஆதார் அட்டை மூலம் பணம் எடுக்கலாம்..
மேலும் படிக்க - Ration Card : ரேஷன் அட்டைதாரர்களுக்கு விரைவில் குட்நியூஸ் அறிவிக்கிறது தமிழக அரசு
மேலும் படிக்க - eKYC Deadline | ரேஷன் அட்டைதாரர்களுக்கு வெளியான அதிர்ச்சி தகவல்! உஷார்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ