2021 ஆம் ஆண்டு வரை தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு செயல்பட்டதற்காக மத்திய அரசு விருது வழங்கியது. அதற்கு தற்போதைய அரசு ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு பெருமை கொள்வது ஏற்றுக்கொள்ள முடியாது என்று பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சியில் பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டியளித்தபோது இவ்வாறு தெரிவித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் ஓபிசி அணியின் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வந்த அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் :-பி.ஜேபி அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதாக தேர்தல் அறிக்கையில் கூறவில்லை.ஆனால், தி.மு.க பெட்ரோல் , டீசல் விலையை குறைப்பதாக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதை போல் லிட்டருக்கு ரூ 5 குறைக்க வில்லை பா.ஜ.க தலைவர் அண்ணாமலை.


பெட்ரோல் டீசலை ஜி.எஸ்.டி கொண்டுவர வேண்டுமென திமுக (DMK government) நாடாளுமன்ற உறுப்பினர் குழு தலைவர் டி ஆர் பாலு கூறுகிறார், மறுபக்கம் மாநில நிதி அமைச்சர் பெட்ரோல் டீசல் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரக்கூடாது என கூறுகிறார். இதில் திமுகவின் நிலைப்பாடு மக்களை குழப்படைய செய்கிறது.



திமுகவின் இந்த இரட்டை நிலைப்பாட்டை திமுக தலைவர் ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும் எனவும் கடந்த ஆட்சிகாலத்தில் சட்ட ஒழுங்கு சிறப்பாக நடைபெற்றதற்காக மத்திய அரசு 2020-2021 மார்ச் வரை சட்ட ஒழுங்கு சிறப்பாக செயல்பட்டதற்கு விருது மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கியுள்ளார்.


இதை தமிழகத்திற்கு கிடைத்த கவுரவமாக பாக்கவேண்டுமே தவிர தற்போது உள்ள அரசு ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு நாங்கள் தான் காரணம் என கூறுவது ஏற்றுகொள்ள முடியாது எனவும் தமிழகத்தை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சி பல்லில்லாத பாம்பாக உள்ளது எனவும் கூறினார்.


ALSO READ | 6 மாதங்களில் நெல் சாகுபடி பரப்பில் பன்மடங்கு ஏற்றம்: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR