அதிமுகவின் அராஜகத்தையும் மீறி திமுக மகத்தான வெற்றி பெற்றுள்ளது: ஸ்டாலின்
அதிமுகவின் அராஜகத்தையும் மீறி திமுக கூட்டணி பெற்றிருக்கும் மகத்தான வெற்றி, மக்கள் நம் மீது கொண்டுள்ள விருப்பத்தையும், நம்பிக்கையையும் காட்டுகிறது என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை: தமிழகத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி பெற்ற வெற்றியை குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். அதாவது, அதிமுகவின் அராஜகத்தையும் மீறி திமுக பெற்றிருக்கும் மகத்தான வெற்றி, மக்கள் நம் மீது கொண்டுள்ள விருப்பத்தையும், நம்பிக்கையையும் காட்டுகிறது. அதே வேளையில் ஆளுங்கட்சி மீது மக்கள் கொண்டுள்ள வெறுப்பு இதன் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது எனக் கூறியுள்ளார்.
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவின் அராஜகத்தையும் மீறி திமுக பெற்றிருக்கும் மகத்தான வெற்றி, மக்கள் நம் மீது கொண்டுள்ள விருப்பத்தையும், நம்பிக்கையையும் காட்டுகிறது.
திமுக கூட்டணியின் உள்ளாட்சி பிரதிநிதிகள் சிறப்பாகவும், நேர்மையாகவும் பணியாற்றுவார்கள் என்பது உறுதி என ட்வீட் செய்து, ஒரு அறிக்கையும் வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் கூறியதாவது,
- உள்ளாட்சித் தேர்தலில் ஆளும்கட்சியின் அராஜகம், அதிகார துஷ்பிரயோகம், தேர்தல் ஆணையத்தின் ஒருதலைப்பட்சமான அணுகுமுறை ஆகிய எதிர்மறைக் கூறுகளை மீறி திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெற்றுள்ளது.
- திமுக பெற்றிருக்கும் மகத்தான வெற்றி மக்கள் நம் மீது கொண்டுள்ள விருப்பத்தையும், நம்பிக்கையையும் காட்டுகிறது. இது மகிழ்ச்சிக்குரிய செய்தி ஆகும்.
- 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதமே உள்ளாட்சித் தேர்தல் நடந்திருக்க வேண்டும். ஆனால் மக்களைச் சந்திக்கப் பயந்து உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் அதிமுக அரசு இழுத்தடித்து வந்தது.
- உச்சநீதிமன்றத்திலும் திமுக சார்பில் வழக்கு தாக்கல் செய்த பிறகே, தமிழக தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தலை நடத்தியுள்ளது எனக் கூறியுள்ளார்.
தமிழகத்தில் 27 மாவட்டங்களுக்கு டிசம்பர் 27 மற்றும் 30 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் நேற்று (வியாழக்கிழமை) முதல் வெளியாகி வருகின்றன குறிப்பிடத்தக்கது.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது