சென்னை: மிழகத்தில் 9 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் 74 மையங்களில் நேற்று முதல் எண்ணப்படுகின்றன. நேற்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை ஆரம்பத்தில் இருந்தே மாவட்ட ஊராட்சிகளிலும், ஒன்றிய ஊராட்சிகளும் திமுக முன்னிலையில் இருந்து வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

9 மாவட்டங்களில் உள்ள 140 மாவட்ட கவுன்சிலருக்கான தேர்தலில் திமுக 138 இடங்களை கைப்பற்றியது. அதிமுக இரண்டு இடங்களை மட்டும் கைப்பற்றியது. 


ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் 1,381 இடங்களுக்கான வாக்கு எண்ணிக்கை, தற்போது வரை 1379 பதவிகளுக்கான முடிவுகள் வெளிவந்துள்ளன. இதில் திமுக கூட்டணி கட்சிகள் 1,020 இடங்களை வென்றுள்ளது. அதிமுக 214 இடங்களையும், பா.ம.க. 47 இடங்களையும், அ.ம.மு.க. 4 இடங்களையும், தே.மு.தி.க. 1 இடத்தையும் கைப்பற்றி இருக்கின்றன. சுயேட்சைகள் மற்றும் இதர கட்சிகள் 92 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.


ALSO READ | உள்ளாட்சி தேர்தல்: மிக மோசமான தோல்வியை நோக்கி அதிமுக


அராஜகத்தின் அத்தியாயம் திராவிட முன்னேற்ற கழகம் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் வரலாறு காணாத வன்முறையையும், ஜனநாயகம் காணாத அக்கிரமங்களையும் கட்டவிழ்த்துவிட்டு மிகப்பெரிய வன்முறையையும் நடத்தி முடித்திருக்கிறது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். 


 



அதில் 2 கட்டங்களாக தேர்தல் நடத்தியதால் தான் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுக்கு தோல்வி ஏற்பட்டது. திமுக பெற்ற வெற்றி புறவாசல் வழியாக பெற்ற வெற்றி. திமுக, தேர்தல் ஆணையத்தின் விதிமீறல்கள், சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளை பட்டியலிட்டால் நாடு தாங்காது. 


விதிமீறல்கள் தொடர்பாக அதிமுக கொடுத்த புகார் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை. பொய் வழக்கு போடப்பட்டு தேர்தல் பணி செய்யவிடாமல் அதிமுக தொண்டர்கள் தடுக்கப்பட்டனர். அதிமுக முகவர்கள் பல இடங்களில் மையங்களில் அனுமதிக்கப்படவில்லை. வாக்கு எண்ணிக்கையை வேண்டுமென்றே தாமதப்படுத்தினர். பல இடங்களில் வெற்றி பெற்ற அதிமுக தொண்டர்களை தோல்வியுற்றவர்களாக அறிவித்துவிட்டனர். மாநில தேர்தல் ஆணையத்தை திமுக அரசு தனது கைப்பாவையாக மாற்றி விட்டது என தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.


ALSO READ |  திமுக கூட்டணி அமோக வெற்றி; தமிழகத்திற்கு ஒளிமயமான எதிர்காலம்: கே.எஸ்.அழகிரி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR