சென்னையில் உலகத்தரம் வாய்ந்த புதிய பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என முதல்வர் பழனிசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னாள் முதல்வர் MGR நூற்றாண்டு விழா அதிமுக சார்பில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து இதன் நிறைவு விழா இன்று சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.


விழாவில் பேசிய முதல்வர் பழனிசாமி அவர்கள் தெரிவிக்கையில்....


"MGR நூற்றாண்டு விழா ஆடம்பர விழா அல்ல, மக்கள நலனுக்கான நடத்தப்பட்ட விழா. 


ஆங்கிலேயர் காலத்திற்கு பின்னர் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் அதிக காலம் ஆட்சி புரிந்த கட்சி அதிமுக தான்.


ரூ.953 கோடி செலவில் சீர் மிகு சென்னை திட்டம் செயல்படுத்தப்படும், தென் மாவட்டங்கஙளுக்கு பயணவழி ஏற்படுத்தும் வகையில் கேளாம்பாக்கத்தில் புதிய பஸ்நிலையம் விரைவில் கட்டப்படும். 
புறநகர் பகுதிகளில் மழை நீர் தேங்காத வகையில் ரூ.100 கோடி செலவில் வெள்ள தடுப்பு பணிகள் நடத்தப்படுகிறது.


கடந்த 7 ஆண்டுகளில் வேளாண் உற்பத்தியில் தமிழகம் 5 விருதுகளும், சிறந்த ஆளுமைக்கான மாநிலங்களில் தமிழகம் 2-வது இடத்தையும் பிடித்துள்ளது.


ஸ்டாலின் வாய் திறக்கும் போதெல்லாம் பொய்தான் கூறுகின்றார். அழகுநிலையம், செல்போன் கடை என பொதுமக்கள் உடமைகளை சேதப்படுத்தி அப்பாவிகளை தாக்கியவர்கள் திமுக-வினர் தான், தகாத செயலில் ஈடுபட்ட திமுக-வினர் மீது ஸ்டாலின் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எதிர்கட்சி தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்று தெரியாதவர் ஸ்டாலின். 


அதிமுக-வை உடைக்க முயன்றவர்களின் சதித்திட்டம் பலிக்கவில்லை. அதிமுக ஆட்சியை விமர்சிக்க திமுக-விற்கு தகுதி இல்லை. 


சென்னையில் உலகத்தரம் வாய்ந்த புதிய பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும். அதிமுக செயல்படாத அரசாக இருந்தால் இத்தனை விருதுகளை வென்றிருக்க முடியாது. அதிமுக ஆட்சியில் அறிவித்த திட்டங்கள் அத்தனையும் நிறைவேற்றப்படும்." என குறிப்பிட்டுள்ளார்