கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறையின் இந்திய விலங்குகள் நல வாரியம் சார்பில் பிப். 6ஆம் தேதியிட்ட அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அதில், பிப். 14ஆம் தேதி பசுமாடு அணைப்பு (கட்டிப்பிடிக்கும்) தினமாக மக்கள் அனுசரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது. அந்த தினத்தால் அன்பு உணர்வு பரவும் மற்றும், கூட்டு மகிழ்ச்ச்சி ஊக்கப்படுத்தப்படும்.   "தாய் பசுவின் முக்கியத்துவத்தை மனதில் கொண்டு, வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும், நேர்மறை ஆற்றல் நிறைந்ததாகவும் மாற்றும் வகையில், அனைத்து பசுப் பிரியர்களும் பிப்ரவரி 14ஆம் தேதியை பசு அணைப்பு தினமாகக் கொண்டாடலாம்" என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் பசுக்களை கட்டிப்பிடிப்பது "உணர்ச்சி வளம்" மற்றும் "தனிநபர் மற்றும் கூட்டு மகிழ்ச்சியை" அதிகரிக்கும் என்று கூறியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | விபூதியை உடலில் எங்கெல்லாம் பூசி கொள்ளலாம்? அதன் மகத்துவம் என்ன?


இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக திமுகவின் சுற்றுசூழல் அணியை சேர்ந்த கார்த்திகேய சிவசேனாதிபதி வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் உங்கள் மாடுகளைப் பாதுகாப்பாக வைத்திருங்கள், மாடுகளை எல்லாம் தொண்டு பட்டிக்குள் பூட்டி அல்லது உங்கள் வீடுகளுக்குள் பூட்டி வைத்துவிட்டு விவசாயிகளாகிய நாம் வெளியே வந்து படுத்துக் கொள்வோம். மாடுகளைப் பாதுகாப்போம், இந்தக் கோமாளி கூட்டத்திடம் இருந்து மாடுகளைப் பாதுகாக்க வேண்டியது நம்முடைய கடமையாகிவிட்டது. கடந்த ஒன்பது வருட காலமாக நாட்டை இந்தக் கும்பலிடம் இருந்து காப்பாற்ற வேண்டிய சூழ்நிலையில் போராடிக் கொண்டிருந்தோம் இனி நம்மையும், மாடுகளாகிய  ஆநிரை செல்வங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது.


நமது சேனாபதி காங்கயம் கால்நடை ஆராய்ச்சி மையம் வருகிற 14 ஆம் தேதி அன்று இயங்காது என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றோம், குறிப்பாக நிறைய மாடுகள் வைத்திருப்போர் மாடுகளை எல்லாம் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளும்படி படி கேட்டுக் கொள்கின்றேன். இந்த மிருக நல ஆர்வலர்கள் Peta, Animal Welfare Board of India கும்பலுக்கு மனிதர்கள் மீது என்றுமே எந்தக் கரிசனையுமே வந்ததில்லை இப்படிக் கூத்தும் கோமாளித்தனமும் இவர்களைக் கொள்ளையடிப்பதற்குக் கல்லா கட்டுவதற்கு எதையாவது ஒன்றைச் செய்து கொண்டு ஊரை ஏமாற்றிக் கொண்டு இருப்பது இவர்களுடைய நோக்கம். இவர்களால் மனிதக் குலத்திற்கோ, சமூகத்திற்கோ எந்த வித பயனுமில்லை, மாடுகளுக்கும் பயனில்லை என்பது குறிப்பிடத்தக்கது" என்று கூறியுள்ளார்.


மேலும் படிக்க | சினிமா பாணியில் வாடகை லாரி டெண்டர்: டெண்டர் பெட்டியை தூக்கிக்கொண்டு ஓடிய மர்ம நபர்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ