பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தேமுதிக தலைவர் 
விஜயகாந்தை  அவரது இல்லத்தில் சந்தித்தார் திமுக தலைவர் ஸ்டாலின்!! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தமிழக தேர்தல் களம் பரபரப்பாகி இருக்கிறது. அதிமுக கூட்டணியில் பாஜகவும் பாமகவும் இணைந்த நிலையில் தேமுதிக இன்னும் முடிவெடுக்கவில்லை. அந்தக் கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகளும் பாஜகவுக்கு 5 தொகுதிகளும் ஒதுக் கப்பட்டுள்ளன. தேமுதிக அதிக தொகுதிகள் கேட்பதால், தொகுதி பங்கீடு பிரச்னையில் இழுபறி நீடிப்பதாகக் கூறப்படுகிறது.


இந்நிலையில், திமுக- காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீட்டு அறிவிப்பும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரசுக்கு 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மற்ற தோழமைக் கட்சிகளுடன் திமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதை தொடர்ந்து, முன்னதாக காங்கிரஸ் கட்சியின் தமிழக முன்னாள் தலைவர் திருநாவுகரசர் விஜயகாந்தை சந்தித்தார். மேலும் இன்று நடிகர் ரஜினிகாந்த்தும் விருகம்பாக்கம் இல்லத்தில் சந்தித்தார். 


திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மதியம் திடீரென சாலிகிராமம் சென்று, விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது விஜயகாந்தின் உடல்நலம் குறித்து விசாரித்தார். அதிமுகவுடன் தேமுதிகவின் கூட்டணி பேச்சுவார்த்தை முடிவுக்கு வராத நிலையில், இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் ஸ்டாலின்  கூறுகையில்; தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நலம் குறித்து விசாரிக்க அவரை சந்தித்தேன். அரசியல் பேச வரவில்லை என அவர் தெரிவித்தார்.  


மேலும், கலைஞர் இறந்த போது அமெரிக்காவில் இருந்து விஜயகாந்த் கண்ணீர் விட்டது இன்னும் எனது மனதில் நிழலாடுகிறது. ஒருவயது என்னைவிட குறைவாக இருந்தாலும் என்னை அண்ணன் என்றே அன்போடு அழைப்பார். தேமுதிக கூட்டணிக்கு வந்தால் நீங்கள் வரவேர்பிர்களா என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, உங்கள் நல்ல என்னத்திற்கு பாராட்டுக்கள் என கூறினார். பாராளுமன்ற தேர்தலில் தேமுதிக இன்னும் தனது நிலைப்பாட்டை அறிவிக்காத நிலையில், மு.க ஸ்டாலின்  சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.