தமிழக அரசைக் கண்டித்து பொதுமக்கள் நாளை கருப்பு சின்னம் அணியும்படி திமுக கூட்டணி கட்சிகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளில் அரசு அலட்சியம் காட்டுவதாக திமுக கட்சி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. இந்த நிலையில், ஊரடங்கு விதிமுறைகளை தளர்த்தி தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 


இது தொடர்பாக மு.க.ஸ்டாலின், கி.வீரமணி, கே.எஸ்.அழகிரி, வைகோ, பாலகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன், ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;


 மே 7-ம் தேதி டாஸ்மாக் கடைகளை திறப்பது என்று அரசு முடிவு செய்துள்ளது. இதனால் சமூக தொற்று மேலும் பரவலாகும் வாய்ப்பே அதிகம் என்பதால் அரசின் இச்செயலை வன்மையாக கண்டிக்கிறோம். மதுக்கடைகளை திறக்க ஆர்வம் காட்டும் அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மக்கள் கருப்பு சின்னம் அணிந்து நாளை காலை 10 மணிக்கு அவரவர் வீட்டு வாசலில் நின்று 15 நிமிடம் முழக்கமிடுங்கள்.  திமுக கூட்டணிக் கட்சிகள் முன்னெடுக்கும் இந்த போராட்டத்தில் தமிழக மக்கள் அனைவரும் கருப்புச்சின்னம் அணிந்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்திட வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.


தமிழக மக்கள் அணியும் இந்த கருப்புச் சின்னம் மற்றும் போராட்டம், அதிமுக அரசின் கண்களை திறக்கட்டும்’ என திமுக கூட்டணி தலைவர்கள் தெரிவித்துள்ளனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டணி கட்சி தலைவர்கள் ஆலோசனை நடத்தி இந்த போராட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.