ரஜினியை கண்டு திமுக வேண்டுமானால் பயப்படலாம்; அதிமுக பயப்படாது என தமிழக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

துக்ளக் வார இதழின் 50-வது ஆண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், 1971 ஆம் ஆண்டு பெரியார் சேலத்தில் நடத்திய மாநாட்டில் இந்துக்களின் கடவுளான ராமர் மற்றும் சீதை படங்களை செருப்பால் அடித்தார். அதுதொடர்பாக செய்தி வெளியிட்ட துக்ளக் இதழுக்கு அப்போதைய கருணாநிதி அரசு தடைவிதித்தது என்று பேசியிருந்தார். இவரின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 


இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின், பன்னீர் செல்வம் ஆகியோர் நடிகர் ரஜினியின் கருத்துக்கு பதிலடி கொடுத்து வந்த நிலையில், தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தேவையில்லாமல் பேசுவதற்கு பதில், நடிகர் ரஜினிகாந்த் வாய்மூடி மவுனமாக இருக்க வேண்டும் என்று காட்டமாக தெரிவித்துள்ளார். 


இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்... ரஜினிகாந்தை விளாசித் தள்ளிவிட்டார். ஜெயக்குமார் பேசுகையில், 1971இல் நடைபெறாத ஒன்றை, நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ளார். இது மலிவான அரசியல். 1971இல் நடைபெறாத விஷயத்தை பேசி ரஜினி மக்களை திசை திருப்புகிறார். தேவையில்லாத ஒன்றை பேசுவதற்கு பதில் ரஜினி வாய்மூடி மவுனமாக இருக்க வேண்டும். துக்ளக் பத்திரிக்கையில் வந்த செய்திக்கு அவுட்லுக் பத்திரிக்கை எப்படி ஆதாரமாக இருக்க முடியும்? எத்தனை ரஜினிகள் வந்தாலும் அதிமுகவை அசைத்துப் பார்க்க முடியாது.


ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை பார்த்து அதிமுகவுக்கு எந்த பயமும் கிடையாது. திமுகவுக்கு வேண்டுமானால் பயம் இருக்கலாம். இவ்வாறு ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.