வாட்ஸ் ஆப் குழுவை விட்டு வெளியேற்றி ஆத்திரத்தில் அட்மின் முகத்தில் குத்து விட்ட திமுக பிரமுகர். முகத்தில் பாக்ஸிங் குத்துவிடும் திமுக பிரமுகரின்  சிசிடிவி காட்சி சமூக வளைதளங்களில் வைரல்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை திருவொற்றியூர் ஜோதி நகர் பகுதியில் வசித்து வருபவர் இளைய குமார். இவர் சொந்தமாக தண்ணீர் கேன் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவர், ஜோதிநகர்  குழு என்ற பெயரில்  வாட்ஸ் ஆப் குழுவை நடத்தி அட்மினாகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 26 ஆம் தேதி மிக்ஜாம் புயல் நிவாரணம் குறித்து அந்த குழுவில் திமுக பிரமுகரான தினேஷ் என்பவரோடு வாக்குவாதம் ஏற்பட்டு அதனால் அட்மினான இளைய குமாரன் தினேஷை குழுவை விட்டு நீக்கியதாக தெரியவருகிறது. இதில் ஆத்திரமடைந்த தினேஷ் 27 ஆம் தேதி அன்று இளைய குமாரனின் கடைக்கு தனது ஆட்களோடு சென்று 


மேலும் படிக்க | தமிழகத்தை மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா! ஒரே நாளில் இத்தனை பேருக்கு பாதிப்பா?


இளைய குமாரின் முகத்தில் பாக்ஸிங் பயிற்சி செய்வது போல குத்து விட்டுள்ளார் தடுக்க வந்தவர்களையும் தினேஷ் தாக்கியுள்ளார். இது தொடர்பாக இளைய குமாரின் தாய் லட்சுமி எண்ணூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில், திமுக பிரமுகர் இளைய குமாரின் முகத்தில் பாக்ஸிங் பயிற்சி செய்யும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


மேலும் படிக்க | விஜயகாந்த் மறைவிற்கு மொட்டை அடித்து சடங்கு செய்த கிராம மக்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ